Ad Code

ஏரோது பிலிப்பு Herod Philip Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 22
ஏரோது பிலிப்பு: சாபத்தின் பிடியில் சிக்கிய வாரிசுரிமை

1. பெயர்: ஏரோது பிலிப்பு Herod Philip 

2. அர்த்தம்: 
குதிரைகளை விரும்புபவர்

3. சிறுகுறிப்பு: 
• இவர் மகா ஏரோதின் மகனும், ஏரோது அந்திபாஸின் சகோதரனும் ஆவார்.
• இவர் இதூரேயா, திராகோனித்தி நாடுகள் அடங்கிய பகுதிக்கு கால்பங்கு அதிபதியாக (Tetrarch) இருந்தார்.
• செசரியா பிலிப்பு என்னும் நகரைக் கட்டியவர் இவரே.
• இவரது மனைவி ஏரோதியாள். ஆனால், இவரது சகோதரனாகிய ஏரோது அந்திபாஸ் இவரிடமிருந்து ஏரோதியாளை பறித்து கொண்டான்.
• வரலாற்றுப் பதிவுகளின்படி, ஏரோது குடும்பத்தைச் சேர்ந்த மற்ற ராஜாக்களைப் போலல்லாமல், இவர் ஓரளவு அமைதியான மற்றும் நீதியான ஆட்சியை நடத்தினார் என்று அறியப்படுகிறது.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
"ஒரு கெட்ட கூட்டத்தில் நான் தான் கொஞ்சம் நல்லவன்" என்று சொல்வதில் எந்த வெற்றியும் இல்லை. ஏரோதின் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் சாபங்களையோ அல்லது நச்சுத்தன்மை வாய்ந்தபழக்கவழக்கங்களையோ அவரால் தீவிரமாக எதிர்த்து முறியடிக்கவில்லை. ஏரோது அந்திபாஸால் ஏரோதியாள் அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, அவளது மகளான சலோமேயை இந்த ஏரோது பிலிப்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குள் வயது வித்தியாசம் மிக அதிகமாக இருந்தது. பிலிப்பு அந்த நச்சுச் சூழலை விட்டு வெளியே வரவில்லை (Toxic Family Cycle).

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
லூக்கா 3:1 (அதிபதியாக இவரது பதவி குறித்த பதிவு)
மாற்கு 6:17-18 ( ஏரோதியாளை ஏரோது அந்திபாஸ் சேர்த்துக்கொண்டது)
மத்தேயு 16:13 (இவர் கட்டிய செசரியா பிலிப்பு பட்டணத்தின் எல்லைகளில் இயேசு ஊழியஞ்செய்தது)

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments