Ad Code

லெனார்ட் ரேவன்ஹில்லின் சபை மற்றும் ஆன்மீக நிலை பற்றிய பொன்மொழிகள் Leonard Ravenhill


இன்று சபைகள் பொழுதுபோக்கை தேடி அலைகின்றன. பொழுதுபோக்கு என்பது மகிழ்ச்சிக்கு சாத்தான் வைத்திருக்கும் மாற்றாகும். கர்த்தருக்குள் உங்களுக்கு அதிக மகிழ்ச்சி இருந்தால், உங்களுக்கு பொழுதுபோக்குகள் குறைவாகவே தேவைப்படும்.

இன்று சபைகளில் அறிவுப்பூர்வமான ரவைகளை அல்லது ஜோக்குகளை சுடுவதன் மூலம் மேடையில் வெற்றி கிடைப்பதில்லை. உண்மையான வெற்றி ஜெப அறையிலேயே தீர்மானிக்கப்படுகிறது.

கடவுளின் வார்த்தையை அறிவதற்கும், அந்த வார்த்தையை அருளிய கடவுளை அறிவதற்கும் இடையே உலகளவிலான வித்தியாசம் உள்ளது.

பாய்ந்தோடும் ஒரு நதியைக் காண யாரும் விளம்பரம் செய்யத் தேவையில்லை, அதுபோல சபையில் உண்மையான ஆன்மீகத் தீ (எழுப்புதல்) இருந்தால் அதை விளம்பரம் செய்ய வேண்டியதில்லை; மக்கள் தாங்களாகவே ஓடி வருவார்கள்.

இன்றைய சபைகளில் தகுதிகள் நிறைந்த பிரசங்க மேடைகள் உள்ளன, ஆனால் அங்கெல்லாம் சுய பெருமையைக் காட்டவே இடம் இருக்கிறது. ஜெப அறையிலோ சுய பெருமைக்கு இடமே இல்லை.

இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தது கெட்ட மனிதர்களை நல்லவர்களாக மாற்ற அல்ல, செத்தவர்களை (ஆவிக்குரிய ரீதியில்) பிழைக்க வைக்கவே வந்தார்!
 
நீங்கள் மக்களிடையே புகழ்பெற்றவராக இருக்க விரும்பினால் 'மகிழ்ச்சியைப்' பற்றி பிரசங்கியுங்கள். நீங்கள் மக்களிடையே வெறுக்கப்பட விரும்பினால் 'பரிசுத்தத்தைப்' பற்றி பிரசங்கியுங்கள்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் மூன்று மனிதர்கள் வாழ்கிறார்கள்: நாம் யார் என்று நாம் நினைப்பது, மற்றவர்கள் நம்மைப் பற்றி நினைப்பது, மற்றும் நாம் உண்மையில் யார் என்று கடவுள் அறிந்தது.

கடவுளோடு நெருக்கமாக இருக்கும் ஒரு மனிதன், எந்த ஒரு மனிதனுக்கும் பயப்பட மாட்டான்.

உலகத்தார் வேதாகமத்தை நம்புவதில்லை, சபையினரோ அதை முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை.

ஒரு மனிதன் தனது மூளை அறிவை வளர்க்க வேதாகமத்தைப் படிக்கலாம். ஆனால், அவனது ஆத்துமா கடவுளுக்காக ஏங்கும்போது மட்டுமே அவன் உண்மையாக ஜெபிக்கிறான்.

Post a Comment

0 Comments