Ad Code

நிக்கொதேமு Nicodemus • Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 23
நிக்கொதேமு: அந்தரங்கத்தில் இருந்து வெளியரங்கம்

1. பெயர்: நிக்கொதேமு Nicodemus
2. அர்த்தம்: 
மக்களை வெல்பவர்

3. சிறுகுறிப்பு: 
• இவர் யூதர்களின் அதிகாரியும், பரிசேயருமான ஒரு முக்கியத் தலைவர் (சனகெரிப் சங்கத்து உறுப்பினர்).
• யூதர்களுக்குப் பயந்து இரவிலே இயேசுவிடம் வந்து ஆன்மீகக் கேள்விகளைக் கேட்டவர்.
• இயேசுவின் மரணத்திற்குப் பின்பு, துணிச்சலோடு வந்து, நூறு இராத்தல் வாசனைத் திரவியத்தைக் கொண்டுவந்து, இயேசுவின் சரீரத்தை அடக்கம் செய்ய உதவினார்.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
நிக்கொதேமு ஆரம்பத்தில் பயத்தினால் இரவில் இயேசுவைத் தேடி வந்தார். ஆனால், நாளாக நாளாக அவரது விசுவாசம் வளர்ந்தது. இறுதியில் மற்ற சீஷர்களே பயந்து ஓடிய சூழ்நிலையிலும், இவர் துணிச்சலாக வெளிப்பட்டு இயேசுவின் சரீரத்தை அடக்கம் செய்தார். நம்முடைய விசுவாச வாழ்வும் ஆரம்பத்தில் பலவீனமாக இருந்தாலும், நாளடைவில் கிறிஸ்துவுக்காகத் துணிச்சலாக நிற்கும் அளவிற்கு வளர வேண்டும்.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
யோவான் 3: 1 - 21 (இயேசுவை இரவில் சந்தித்தது)
யோவான் 7: 50 - 52 (இயேசுவுக்காகப் பரிந்து பேசியது)
யோவான் 19: 39 - 42 (இயேசுவின் சரீரத்தை அடக்கம் செய்தது)

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments