திருமறையில் யார் இவர் யாரோ? - 47
அல்பேயு: தடை seyyavendaam
1. பெயர்: அல்பேயு (மத்தேயுவின் தந்தை) • Alpheus
2. அர்த்தம்:
மாற்றக்கூடியவன் அல்லது அதிர்ஷ்டம்
3. சிறுகுறிப்பு:
• அல்பேயு, சுவிசேஷகராகிய மத்தேயு (லேவி) என்பவருடைய தந்தை ஆவார்.
• வேதாகமத்தில் அல்பேயு என்ற பெயரில குறிப்பிடப்பட்டுள்ளது- மத்தேயுவின் தந்தை & யாக்கோபு (சிறிய யாக்கோபு) என்பவருடைய தந்தை. இவர்கள் இருவரும் ஒருவர்தானா அல்லது வெவ்வேறு நபர்களா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
• திருச்சபையின் வரலாற்று ஆசிரியர்களான யூசேபியஸ் (Eusebius) மற்றும் பாப்பியஸ் (Papias) போன்றவர்களின் எழுத்துக்களில், இயேசுவின் பன்னிரு சீடர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவர்கள் அல்பேயுவின் குமாரர்களாகிய மத்தேயு மற்றும் யாக்கோபு ஆகியோரை வரலாற்று நபர்களாக உறுதிப்படுத்துகின்றனர்.
• மத்தேயு வரி வசூலிப்பவராக இருந்த கப்பர்நகூம் பகுதி, முதலாம் நூற்றாண்டில் ரோமானிய மற்றும் ஏரோது வம்சத்தின் முக்கிய வரி வசூல் மையமாக இருந்தது.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
ஒரு தந்தை தன் பிள்ளைகள் கடவுளின் ராஜ்யத்தின் பணிக்காகத் தங்களைத் தியாகம் செய்து, ஆழமான மாற்றத்திற்கு (மத்தேயுவின் வரி வசூலிக்கும் பணி முதல் சீடர் பணி வரை) தங்களை ஒப்புக்கொடுப்பதில் அல்பேயுவின் குடும்பப் பின்னணி ஒரு முக்கியப் பங்கு வகித்திருக்க வேண்டும். நம் பிள்ளைகளின் வாழ்க்கையில் கர்த்தருடைய அழைப்பு நிறைவேறும்போது, அதை தடை செய்யாமல், ஊக்கப்படுத்தும் பெற்றோர்களாக நாம் இருக்க வேண்டும்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
மத்தேயு 9:9
மாற்கு 3:18
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments