Ad Code

உங்கள் சபை ஆராதனைக்கு போஸ்டர்கள் எப்படி தயார் செய்கிறீர்கள்? How to create Posters for Church Services

இன்றைக்கு துதி ஆராதனை, தெய்வீக ஆராதனை, பரிசுத்த நாள் ஆராதனை, ஓய்வுநாள் ஆராதனை, தீர்க்கதரிசன ஆராதனை, விடுதலையின் ஆராதனை, & அபிஷேக ஆராதனை, எனப் பல பெயர்களைப் பயன்படுத்தி பெந்தேகோஸ்தே சபைகள் மட்டுமல்ல, தென்னிந்திய திருச்சபையினரும் போஸ்டர்களில் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம்.

"ஆராதனைகளின் பெயரிடல்" குறித்த சிக்கல், வெறும் சொல்லாடல் சார்ந்ததல்ல; அது வழிபாட்டின் இறையியல் (Theology of Worship) மற்றும் அதன் நோக்கம் சார்ந்த ஒரு தீவிரமான விவாதத்திற்குரியது."

பொது வழிபாட்டின் இயல்பை சீர்குலைக்கும் வண்ணம் இவை மாறிவிடுகின்றன. இறையியல் பிழைகள் காணப்படுகின்றன. ஞாயிறு அன்று ஒரு ஆராதனை (வழிபாடு) ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில், அல்லது ஒரு சாரர் சார்ந்தவாறு நடைபெறுவது அல்ல. 

மக்கள் எளிதில் ஈர்க்கப்பட வேண்டும், ஏதோ ஒரு சிறப்பு அதிசயம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும் என்ற "சந்தைப்படுத்துதல்" (Marketing) நோக்கம் இங்கே மேலோங்கி இருக்கிறது.

ஆகவே, முன்னர் ஆங்கிலிகன் போன்ற சபைகளில் பயன்படுத்தியது போல் ஒரு பொதுப் பெயர் பயன்படுத்துவது சாலச் சிறந்தது. 

ஆங்கிலிகன் சபைகளில், காலை ஆராதனை (Matins), மாலை ஆராதனை (Evensong) என்றும், கர்த்தருடைய பந்தி இருந்தால், புனித நற்கருணை (Holy Communion) என்றும் அழைக்கின்றனர்.  

இப்பெயர்கள் வழிபாட்டின் நேரத்தையோ அல்லது முக்கிய நிகழ்வையோ மட்டுமே குறிக்கின்றன. இவை வழிபாட்டைப் பிரித்துக்காட்டாமல், விசுவாசிகளை ஒரே நோக்கத்தில், அதாவது கடவுளை ஆராதிக்கும் பொதுவான ஒரே இலக்கில் ஒருங்கிணைக்கின்றன.

இவ்விதம் பார்த்தால், நாமும் பொதுவாக,
 
காலை ஆராதனை (Morning Service)
• மாலை ஆராதனை (Evening Service)
என்றே பயன்படுத்தலாம். 

ஞாயிறு அன்று நடைபெறுவதால்
ஞாயிறு ஆராதனை (Sunday Service - ஞாயிறு வழிபாடு) 
எனவும் பயன்படுத்தலாம். 

இவ்வாறு கிறிஸ்தவ வழிபாட்டிற்கு வெறும் "காலை ஆராதனை" அல்லது "ஞாயிறு ஆராதனை" என்று பெயரிடுவது, அந்த வழிபாட்டின் புனிதத்தையும், திருச்சபையின் கூட்டு வழிபாட்டின் (Corporate Worship) முக்கியத்துவத்தையும் நிலைநாட்ட உதவும். திருச்சபையின் வழிபாட்டு இறையியல் நேர்த்தியை (Liturgical Integrity) மீட்டெடுக்க வேண்டும்.
Comment here


Post a Comment

0 Comments