Ad Code

யாக்கோபு (இயேசுவின் சகோதரர்) James the Brother of Jesus • Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 42
யாக்கோபு: தாழ்மையின் மேன்மை

1. பெயர்: யாக்கோபு (இயேசுவின் சகோதரர்) James the Brother of Jesus

2. அர்த்தம்: 
பின்தொடருகிறவர். எபிரெய மொழியில் 'யாக்கோப்' என்பது 'குதிகாலைப் பிடிப்பவர்' என்பதைக் குறிக்கும்.

3. சிறுகுறிப்பு: 
• இவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாம்சத்தின்படி பிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.
• ஆரம்பத்தில் இயேசுவின் ஊழியத்தை விசுவாசிக்காத இவர், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவரைச் சந்தித்து, விசுவாசியாக மாறினார்.
• பின்னாளில், எருசலேம் திருச்சபையின் முக்கியமான தூணாக (Leaders/Pillars) திகழ்ந்தார்.
• இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின், யாக்கோபு எருசலேமின் முதல் ஆயராகப் (Bishop) பொறுப்பேற்றார்.
• புதிய ஏற்பாட்டில் உள்ள யாக்கோபு நிருபத்தை எழுதியவர் இவரே.
• கிபி. 62-இல், யூதர்களின் தலைமைக்குருவான அனானஸ் யூத சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டி, இவருக்குக் கல்லெறிந்து மரணதண்டனை விதித்தார்.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
எருசலேம் திருச்சபையில் ஒரு முக்கியத் தலைவராக உயர்ந்தும், தன்னை "தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு" (யாக்கோபு 1:1) என்றுதான் அடையாளப்படுத்திக்கொண்டார். அதிகாரம் அல்லது பொறுப்பு வரும்போது, தற்பெருமை கொள்ளாமல், தாழ்மையுடன் இறைவனின் ஊழியக்காரனாகத் தொடர்ந்து செயல்படுவதை இவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
யாக்கோபு 1:1-27 (விசுவாசத்தின் சோதனைகளும் பொறுமையும்)
அப்போஸ்தலர் 15:13-21 (எருசலேம் சங்கத்தில் யாக்கோபின் தீர்ப்பு)
கலாத்தியர் 1:19 (யாக்கோபு பற்றிய பவுலின் குறிப்பு)

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments