சீமோன்: குடும்ப இரத்தமல்ல; சிலுவை இரத்தமே.
1. பெயர்: சீமோன் (இயேசுவின் சகோதரர்) Simon
2. அர்த்தம்:
"கடவுள் கேட்டார்" (God has heard)
3. சிறுகுறிப்பு:
• சீமோன், இயேசு கிறிஸ்துவினுடைய பூமிக்குரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். சகோதர முறை.
• இவர், யாக்கோபுக்குப் பிறகு எருசலேம் திருச்சபையின் இரண்டாவது ஆயராக (Bishop of Jerusalem) பொறுப்பேற்று, பல ஆண்டுகள் சபையை வழிநடத்தினார்.
• இறுதியில் கி.பி. 107-ம் ஆண்டுவாக்கில் ரோம ஆட்சியாளரால் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
சீமோன் இயேசுவுடன் வளர்ந்திருந்தாலும், இயேசுவே மேசியாவாகிய இறைமகன் என்பதை ஏற்றுக்கொண்டு, அவருக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்ததற்கு அசைக்க முடியாத விசுவாசம் தேவைப்பட்டது. சீமோன் உட்பட 4 சகோதரரும், இயேசுவை வெறும் சகோதரனாக மட்டும் பார்க்காமல், தங்கள் ஆண்டவராக ஏற்றுக்கொண்டனர். இரத்த உறவைவிட, இறைவனை ஏற்றுக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படிதலே மேலானது என்பதை சீமோனின் வாழ்வு நமக்கு உணர்த்துகிறது.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
மத்தேயு 13:53-58 (இயேசுவின் சொந்த ஊரில் அவரைப் புறக்கணித்தல்)
மாற்கு 6:1-6 (இயேசுவின் சகோதரர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது)
அப்போஸ்தலர் 1.14 (மேல் வீட்டறை)
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments