Ad Code

யோசே (இயேசுவின் சகோதரர்) Joses Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 44
யோசே : தனிப்பட்ட விசுவாசம்

1. பெயர்: யோசே (இயேசுவின் சகோதரர்) Joses 

2. அர்த்தம்: 
எபிரேய மொழியில் 'யோசே' (Joses அல்லது Joseph) என்ற பெயருக்கு "அவர் பெருகப்பண்ணுகிறார்" (He will add)

3. சிறுகுறிப்பு: 
• இயேசு கிறிஸ்துவினுடைய பூமிக்குரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். சகோதர முறை.
• இயேசு வளர்ந்த நாசரேத் ஊரில் அவருடைய சகோதரனாக அறியப்பட்டவர். 
• மற்றவர்களைப் போலவே இவரும் ஆரம்பத்தில் இயேசுவின் ஊழியத்தையும், அவருடைய தெய்வீக அதிகாரத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ளாதவராகவே இருந்தார்.
• இவரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் மிகவும் குறைவு. இவர் ஒரு விசுவாசியாக வாழ்ந்து, எருசலேம் அல்லது அதன் சுற்றுப்புறங்களில் சுவிசேஷப் பணிகளில் ஈடுபட்டார் என்றும் நம்பப்படுகிறது.
• யோசே (Joses) எப்படி இறந்தார் அல்லது அவர் தியாக மரணம் (Martyrdom) அடைந்தாரா என்பது குறித்த எந்தவொரு பதிவோ அல்லது உள்ளூர் பாரம்பரியக் குறிப்புகளோ இல்லை.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
இயேசுவின் சகோதரனாக இருப்பது என்பது யோசேக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். ஆனால், இயேசுவே கூறியது போல, ஒரு தீர்க்கதரிசிக்கு தன் சொந்த ஊரிலும் தன் வீட்டிலும் கனவு இருப்பதில்லை (மத்தேயு 13:57). யோசே இயேசுவின் சகோதரனாக வளர்ந்திருந்தாலும், அவர் இயேசுவை கர்த்தராக அங்கீகரிக்க ஒரு தனிப்பட்ட 'விசுவாச அனுபவம்' தேவைப்பட்டது. மதப் பாரம்பரியம் அல்லது பக்திமான் குடும்பத்தில் பிறப்பதால் மட்டும் ஒருவர் இரட்சிப்பை அடைந்துவிட முடியாது.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
மத்தேயு 13:53-58 (இயேசுவின் சொந்த ஊரில் அவரைப் புறக்கணித்தல்)
மாற்கு 6:1-6 (இயேசுவின் சகோதரர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது)
அப்போஸ்தலர் 1.14 (மேல் வீட்டறை) 
1 கொரிந்தியர் 9.5 (சுவிசேசப் பணி)

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments