Ad Code

லீசானியா Lysanias Bible Characters,

திருமறையில் யார் இவர் யாரோ? - 38
லீசானியா: இயேசுவால் இன்றும் நினைவுக்கூரப்படுதல்

1. பெயர்: லீசானியா Lysanias

2. அர்த்தம்: 
துயரத்தைத் தீர்க்கிறவன்

3. சிறுகுறிப்பு: 
• இவர் ரோம பேரரசின் காலத்தில், அபிலேனே (Abilene) என்ற மாகாணத்தின் அதிபதியாக (Tetrarch) இருந்தார்.
• இயேசு கிறிஸ்துவினுடைய ஊழியத்தின் தொடக்க காலத்தைக் குறிக்கும் வரலாற்றுப் பின்னணியை லூக்கா எழுதும்போது இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
• கண்டெடுக்கப்பட்ட ரோம கல்வெட்டு ஆதாரங்கள் (Inscriptions), கி.பி. 14 முதல் 37 வரை ஆண்ட திபேரியு ராயனின் காலத்தில் "அபிலேனே" பகுதியை ஆண்ட மற்றொரு லீசானியா II (Lysanias the Younger) இருந்ததை நிரூபித்தன. லூக்கா மிகத் துல்லியமாக இந்த இரண்டாம் லீசானியா பற்றித்தான் எழுதியுள்ளார்.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
அன்று லீசானியா பெரிய அதிகாரத்தில் இருந்திருக்கலாம். ஆனால், இன்று உலகம் அவரை நினைவுகூருவது அவரது ஆட்சியின் சிறப்பால் அல்ல; மாறாக, லூக்கா எழுதிய இறைவார்த்தையின் ஒரு சிறிய வரியில் அவரது பெயர் இடம் பெற்றிருப்பதால்தான். உலகப் பெருமைகளை விட, இறைத் திட்டத்தில் நம் பெயர் எழுதப்பட்டிருப்பதே நித்தியமானது.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
லூக்கா 3.1

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments