1
தேவரீர் என்னை ஆசீர்வதித்து
என் எல்லையைப் பெரிதாக்கி
உமது கரம் என்னோடிருந்து
தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும். ஆமென்.
2
இன்றைத் தினமிதிலும் - தொழில்
எந்தெந்த வகைகளிலும்
உன் திரு மறைப்படி ஒழுகிட எமக்கருள்
ஊன்றியே காத்துக் கொள்வாய்.
தோத்திரம் பாத்திரனே தேவா
தோத்திரந் துதியுமக்கே
நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்
நித்தியம் துதியுமக்கே. ஆமென்.
3
இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்
இயேசுவின் திருப் பாதத்தில்
காலை முதல் மாலை வரை
காக்கும் கர்த்தர் நமது இயேசு
காலைத் தள்ளாட என்றுமே விடார். ஆமென்.
4
இந்த நாளிலும் என்னைக் காப்பவர்
இன்பமான என் இயேசுவே
சந்ததம் உண்மை சாட்சி கூறவே
சிந்தை கூர்ந்தென்னைத் தேற்றுவீர்.
காலை நேரத்தில் கர்த்தன் இயேசுவை
கனிவுடன் துதி பாடுவேன். ஆமென்.
5
எந்தன் இன்ப இயேசுவை நீர்
தினம் என்னை நடத்தும்
நாளை எந்தன் நாள் அல்லவே,
நேற்றும் சென்று போயிற்றே
இன்று உம் வழியில் செல்ல
பெலன் தாரும் இயேசுவே. ஆமென்.
6
புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா. ஆமென்.
7
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை - அவை காலைதோறும் புதிதாயிருக்கும். ஆமென்
0 Comments