Ad Code

மாலை வழிபாடு 7 முடிவு கவிகள்



1
கர்த்தாவே, இருளின்
பயங்கள் நீக்கிடும்
விழிக்குமட்டும் தூதரின்
நற்காவல் ஈந்திடும்.        ஆமென்

2
என்னோடிரும், மா நேச கர்த்தரே,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,
நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும். ஆமென்

3
ஒளி மங்கி இருளாச்சே 
உத்தமனே வாருமையா
களித்திரவு காத்திருப்போம் 
காதலனே கருணை செய்வாய்.     ஆமென்

4
ஐயரே நீர் தங்கும் என்னிடம்
ஐயரே நீர் தங்கும் – இப்போது
அந்தி நேரம் பொழு தஸ்தமித்தாச்சே
ஐயா நீர் இரங்கும்.      ஆமென்

5
மெய் ஜோதியாம் நல் மீட்பரே,
நீர் தங்கினால் ராவில்லையே;
என் நெஞ்சுக்கும்மை மறைக்கும்
மேகம் வராமல் காத்திடும்.      ஆமென்

6
என்றைக்கும் மீட்பர் மார்பிலே
நான் சாய்வது பேரின்பமே
என்றாவலாய் நான் ராவிலும்
சிந்தித்துத் தூங்க அருளும்.        ஆமென்

7
தேவரீர் உம் சமாதானம்
என்னில் தாருமே
வெறுப்பினில் உம் அன்பையும்
விரோதத்தில் மன்னிப்பையும்
காரிருளில் ஒளியையும்
துக்கத்தினில் களிப்பையும்
கொடுக்கும் உம் சமாதான
கருவியாக மாற்றிடும்.         ஆமென்

Post a Comment

0 Comments