Ad Code

Liturgical Colours - 2 ஆலயத்தில் உபயோகிக்கும் நிறங்களின் பின்னணி & அர்த்தம் என்ன



4. சிவப்பு ❤️ Red

எல்லாருடைய உடலிலும் ஓடக்கூடிய இரத்தத்தின் நிறமான சிவப்பு ஓச்சரில் (Ochre) இருந்து தயாரிக்கப்பட ஆரம்பித்ததிலிருந்து பயன்பாட்டில் உள்ளது. வரலாற்றுக்கு முந்தைய கலையில் (prehistoric art) முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்களில் ஒன்றாகும். பண்டைய எகிப்தியர்கள் விழாக் காலங்களில் தங்கள் முகங்களில் சிவப்பு வண்ணம் பூசியிருக்கின்றனர். ரோமானிய தளபதிகள் வெற்றிகளைக் கொண்டாட தங்கள் உடல்களில் சிவப்பு நிறத்தை பூசியிருக்கின்றனர்.

இந்த வண்ணத்தை நாம் ஆலயத்தில் இரத்த சாட்சிகளாக மரித்த இறைப் பணியாளர்களின் திருநாட்களில் பயன்படுத்துகிறோம். திருநாட்கள் எப்போது வரும்? Easy to Remember .... click here . அதன் உட்பொருள் என்னவென்றால், 

            i) கிறிஸ்துவின் போர் வீரர்கள் இரத்தம் சிந்தி மரித்து (Martyrdom) சபைகளை உருவாக்கி வெற்றிக் கண்டிருக்கிறார்கள்.

            ii) நாமும் இறை சித்தத்தை நிறைவேற்றிட, அதாவது நம்மை வெறுத்து, இறைப் பணியாற்றிட அழைப்பு விடுக்கிறது.

            

5. கருப்பு 🖤 Black

கற்கால குகை ஓவியங்களில் கலைஞர்கள் பயன்படுத்திய முதல் வண்ணங்களில் ஒன்றானது கருப்பு நிறம். இது பண்டைய எகிப்து மற்றும் கிரேக்கத்தில் பாதாள உலகத்தின் நிறமாக பயன்படுத்தப்பட்டது. ரோமானியப் பேரரசில், இது துக்கத்தின் நிறமாக மாறியது. கிறிஸ்துவின் மரணத்தை நாங்கள் சுமந்து திரிகிறோம் என்பதற்கு அடையாளமாக, கிறிஸ்தவ சமயக் குருக்களின் ஆடைகளின் நிறமாக ஆதிகாலத்தில் இருந்தது.

இந்த நிறத்தை நாம் ஆலயத்தில் புனித வெள்ளி மற்றும் அடக்க ஆராதனையில் பயன்படுத்துகிறோம். காரணம் என்னவென்றால்,

          i) பிறருடைய துன்பத்தில் நாம் பங்கெடுக்கவும், துக்கத்தை வெளிப்படுத்தவும் இந்த நிறம் கற்றுத் தருகிறது.

          ii) கிறிஸ்துவின் அச்சடையாளங்களை சுமந்தவர்களாக வாழ்வும், அவரின் நற்செய்தியை அறிவிக்கும் வீரர்களாக வாழ (as a passion of Christ) நமக்கு அழைப்பு கொடுக்கிறது.


6. தங்க நிறம் 💛 Gold

தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட காலக் கட்டத்திலிருந்தே இந்த கலர் குறித்து வரலாற்றில் உள்ளன. புனிதமான பொருட்களை செய்யவும், மன்னர்கள் அணியும் ஆபரணங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

தங்க நிறமானது ஆலயப் பயன்பாட்டில் பாரம்பரிய முறைப்படி என்றைக்கு பயன்படுத்த வேண்டுமென்று இல்லை. ஆனால் பண்டிகை நாட்களில் வெள்ளை கலருக்கு பதிலாக பயன்படுத்தபடுகிறது. இதன் உட்பொருள் என்னவென்றால்,

          i) மகிழ்ச்சியின் அடையாளமாக கோல்டு கருதப்படுவதால் இறை சமுகத்தில் மகிழ்ச்சியாக இருக்க நம்மை கவர்ந்திழுக்கிறது.

          ii) மிகுதியின் அல்லது திருப்தியின் அடையாளமாக கருதப்படும் தங்க நிறம் இறையாசியில் திருப்தியோடு வாழ அழைப்பு விடுக்கிறது.

எந்தெந்த நிறங்களை எப்போது பயன்படுத்த வேண்டும்? click here

Post a Comment

2 Comments

Contact us to design Church Altar table cloth, Altar back screen, Communion Cushion, Pulpit and Lectern hangings, Stoles and Vestments to your church.... Blessing Fashion Works Sawyerpuram Thoothukudi....9442348271
Anonymous said…
I seen Red in my Church