Ad Code

Liturgical Colours - 1 ஆலயத்தில் உபயோகிக்கும் நிறங்களின் பின்னணி & அர்த்தம் அறிவோம்

 


1. செங்கரு நீலநிறம் 💜 Purple

இயற்கையில் காணப்படுகின்ற நிறங்களோடு ஒப்பிடும் போது அரிதாக காணப்படுகின்ற இந்த நிறமானது ஸ்பைனி டை-மியூரெக்ஸ் நத்தை (spiny dye-murex snail) சுரக்கும் ஒரு பொருளிலிருந்து தயாரிக்கப்படும் டைரியன் ஊதா சாயமாகும். ஆரம்பக் காலக்கட்டத்தில் இந்த நிறம் பேரரசர்கள் மாத்திரம் பயன்படுத்துவதாக இருந்தது. ஏனென்றால் இதனை தயாரிப்பது கடினமானது மற்றும் விலையுயர்ந்தது. அன்று போரில் வெற்றி பெற்றால் அந்த அரசரை குறிப்பிடும் போது "born to the purple" என்று பாராட்டியிருக்கிறார்கள். இந்த நிறத்திற்கு வர்த்தக நகரமான லீபனோன் (Lebanon in Morden Tyre) பெயர்பெற்றது. இன்றைக்கு கலர் தயாரிப்பின் யுக்திகள் மற்றும் நவீன முன்னேற்றங்களால் மற்ற கலர்கள் போல் சாதாரணமாகி விட்டது. 

கவர்ச்சியாக மற்றும் அதற்கேற்ப புனிதமாகக் கருதப்படுகின்ற இந்த வண்ணத்தை இரண்டு பருவங்களில் (Advent & Lent) ஆலயத்தில் பயன்படுத்துகிறோம். மேலும் ஆளுமையை குறிக்கும் வண்ணம், பேராயர்களின் அங்கி இந்த நிறத்தில் தான் இருக்கும். காரணம் என்னவென்றால்,

          i) அட்வெந்து காலம் என்பது கிறிஸ்தரசரின் வருகையை எதிர்ப்பார்ப்பதைக் குறிக்கும். 

           ii) கிறிஸ்தரசர் இந்த பூமியில் தன்னை பலியாக ஒப்புக்கொடுத்தாலும், அவர் யூதருடைய ராஜா என்பதை யாராலும் மாற்ற முடியாது. 

          iii) இந்த கலர் ஆளுமையை (Royality) குறிப்பதால், நாம் கிறிஸ்துவின் பாடுகள் வழியாக மீட்கப்பட்டு, இறைராஜ்ஜியத்திற்கு காத்திருக்க அழைப்புக் கொடுக்கிறது.


2. வெள்ளை 🏳️ White

உலகின் பழங்காலந்தொட்டு பயன்பாட்டிலுள்ள எந்தவொரு சாயலற்ற வெள்ளை நிறமானது ஒளியின் புலப்படும் அனைத்து அலைநீளங்களையும் முழுமையாக பிரதிபலிக்கிறது மற்றும் சிதறடிக்கும். பண்டைய எகிப்து மற்றும் ரோமில், பூசாரிகள் வெள்ளை நிற ஆடைகளையும் மற்றும் ரோமானியர்கள் தங்கள் குடியுரிமையின் அடையாளமாக வெள்ளை டோகா (white toga as a symbol of citizenship) அணிந்தனர்.

வெள்ளை நிறம் தூய்மை (Purity), புத்துணர்வு (Refresh), மற்றும் வெளிச்சத்தின் (Light) அடையாளமாக காணப்படுகின்றது. இந்த வண்ணத்தை ஆலயத்தில் 2 (Christmas & Resurrection) பருவங்களிலும் மற்றும் சிறப்பு வழிபாடுகளிலும் பயன்படுத்துகிறோம். அதன் உட்பொருள் என்னவென்றால்,

        i) கிறிஸ்துவின் பிறப்பு மனித சமுதாயத்தின் முழு தூய்மையாக்கலுக்கு ஆதாரமாக அமைந்தது.

        ii) கிறிஸ்துவின் உயிர்ப்பு கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு புதிய புத்துணர்வின் மையமாக இருந்தது.

        iii) இந்த வண்ணமானது நம்மை கிறிஸ்துவால் மறுபிறப்பு அடைந்தவர்கள் என்பதை நினைபூட்டி, தூய்மையாக ஒளியின் பிள்ளைகளாக வாழ அழைப்பு விடுக்கிறது.


3. பச்சை 💚 Green 

இயற்கையாகவே நாம் பார்க்க முடிகின்ற பச்சை நிற பயன்பாடு என்பது, அதன் தயாரிப்புக்கு பின்னரே அது ஒரு வண்ணமாக அறிமுகப்படுத்தப்பட்டது. வெள்ளை, கருப்பு, சிவப்பு, மற்றும் மஞ்சள் என்ற நான்கு நிறங்களே பண்டைய கிரேக்கம் கலாச்சரத்தில் நடைமுறையில் இருந்திருக்கின்றன. அதற்கு பின்னரே பயன்பாட்டில் பச்சை நிறம் வந்துள்ளது. சிவப்பு நிறம், பிரபுக்களின் இல்லங்களிலும் (House of Lords), பொதுவானவர்களின் வீடுகளைக் (House of Commons) குறிக்க இந்த நிறமும் அடிக்கப்பட்டுள்ளன. 

இந்த வண்ணத்தை நாம் ஆலயத்தில் ஒரேயொரு பருவத்தில், அதாவது பொதுக்கால வாரங்களில் பயன்படுத்துகிறோம். காரணம் என்னவென்றால்,

       i) வளர்ச்சியின் அடையாளமாக பச்சை கருதப்படுவதால், பொதுக்காலங்களிலும் இறைமக்கள் கடவுளுக்குள் வளர்ந்து பெருக நினைப்பூட்டுகிறது.

       ii) புதுப்பித்தலின் அடையாளமாக கருதப்படும் இந்த வண்ணம், துளிர்விடுகின்ற அதாவது மறுவுருவாக்கம் (Renewal) பெறுகின்ற முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.

       iii) உறவின் முக்கியத்தை வலியுணர்த்தும் இந்த நிறம் உறவுகளில் பசுமை மாறா வண்ணம் வாழ அழைப்பு கொடுக்கிறது.

சிவப்பு, கருப்பு, கோல்டு நிறங்கள் குறித்து அறிய click here


Post a Comment

3 Comments