தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலம் கேரளாவிலும் தன் எல்லையைக் கொண்டுள்ளது. கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் தென்மலையிலிருந்து மேற்கே 15 KM தொலைவில் அமைந்துள்ளது பிளாரன்ஸ் எஸ்டேட். இங்கு ரப்பர் மரத்திலிருந்து இரப்பர் எடுக்கும் கம்பெனியில் தமிழ் பேசும் மக்கள் அங்கு தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். மலையாள மக்களும் வாழ்கின்றனர். இவர்களில் கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் வழிபட ஆலயம் ஒன்று உள்ளது. அது தான் சி.எஸ் ஐ நல்மேய்ப்பர் ஆலயம்.
திரு.பிரான்சன் என்பர் அங்கு மேலாளராக (Manager in Company) பணியாற்ற போது, இந்த ஆலயத்தைக் கட்ட பெரும் முயற்சிகள் எடுத்துள்ளார். பின்னர் இந்த ஆலயத்தில் தான், பிளாரன்ஸ், ஆனைசாடி, மற்றும் சேனைகிரி பகுதி மக்கள் கூடிவந்து கடவுளை ஆராதித்து வந்துள்ளனர்.
1992 ஆம் ஆண்டு கேரளாவை தாக்கிய வெள்ளம் இந்த பகுதியையும் பாதித்தது. அதில் நவம்பர் 13 ஆம் நாள் வெள்ளத்தில் ஆலயம் இடிந்து விழுந்தது. அதன் பிறகு இறையருளால் புதிய ஆலயம் கட்டப்பட்டு, 15.03.2002 அன்று பேராயர் கனம். ஜெயபால் டேவிட் அவர்களால்ரதிஷ்டை செய்யப்பட்டது.
2019 ஆம் ஆண்டு எஸ்டேட் 6 சபைகளும் நெடும்பாறை சேகரமானது. அதன் முதல் திருமண்டல பெருமன்ற உறுப்பினராக பிளாரன்ஸ் சபையைச் சேர்ந்த திரு. நவமணி அவர்கள் தேர்தலின்றி தெரிவுசெய்யப்பட்டது சபை வரலாற்றில் முக்கியமான ஒன்றாகும். தற்சமயம் 25 குடும்பங்கள் சபையில் உள்ளது.
நல்மேய்ப்பராம் இயேசு கிறிஸ்து உங்களை நேர்த்தியான பாதையில் வழிநடத்துவாராக.
0 Comments