Ad Code

ஒன்றுபடுதலே அன்பு | Love in Unity

Unity
Unity 


அன்பினால் தமதோரே குமாரனோடு நாம்
ஒன்றாகிட அழைத்து பிதாவின் அன்பு

அன்பினால் வாழ்த்தி உள்ளத்தில் பொல்லாங்கின்றி
ஒருமனமாய் வாழ்வது தாவீதுகாட்டிய அன்பு

அன்பினால் இரண்டு பேர் நடந்திடவே
ஒருமனப்பட வேண்டுமென்பது ஆமோஸ் உரைக்குமன்பு

அன்பினால் ஆண்டவர் மனிதனோடு மனிதனாய்
ஒன்றுபட்டு வாழவந்தது இயேசுவின் அன்பு

அன்பினால் மனிதனுக்குள் வாசம் செய்திட
ஒன்றுபடுகையில் நிரப்பிடுவது தூயாவியின் அன்பு

அன்பினால் நேசிக்கிறேன் என்றுரைப்பதை விட
ஒரே சரீரமாக கிறிஸ்துவில் இணைவது நல்லன்பு

அன்பினால் அயலாரிடம் சண்டைகள் இன்றி
ஒற்றுமையாய் வாழ்வது நாம் காட்டிடுமன்பு

❤️❤️❤️
சிந்திக்க....
கிறிஸ்துவில் இணைந்து ஒரே சரீரமாயிருக்கிறோமா?
நம்மைப் போல் கிறிஸ்துவில் அவயவாமாயுள்ள
பிறனிடம் அன்புகூராதிருந்தால் ஒரே சரீரமாவதெப்படி?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
பிளந்திட்டால் உண்டு அழிவு

Post a Comment

0 Comments