காத்திரு தேவசமுகத்தில் காத்திரு
கேட்டிடு விசுவாசத்தோடு கேட்டிடு
அந்நேரமே உனக்கு ஆரோக்கியமே
பயந்திடு தேவனுக்கே பயந்திடு
விலகிடு தீமையைவிட்டு விலகிடு
இதுவே உன்நாபிக்கு ஆரோக்கியமே
கண்டுபிடி இறைவாக்கைக் கண்டுபிடி
காத்திரு இருதயத்துக்குள்ளாய் காத்திரு
உன் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமே
போதித்திடு ஆரோக்கியவசனத்தைப் போதித்திடு
பேசிடு ஆரோக்கியமானதைப் பேசிடு ஜீவவிருட்சமானது ஆரோக்கியமுள்ள நாவே
சொல்லிடு புத்திமதியைச் சொல்லிடு
கூறிடு சுவிசேஷத்தைக் கூறிடு
அன்பு, விசுவாசம் பொறுமையில் ஆரோக்கியமாகவே
கூப்பிடு கர்த்தரைை கூப்பிடு பெற்றிடு பாவமன்னிப்பை பெற்றிடு வாலிபத்தைக் காட்டிலும் ஆரோக்கியமாகவே
📓📓📓
நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி உன் காயங்களை ஆற்றுவேன்.
0 Comments