Ad Code

மறுதலித்து தப்பிக்கலாமே



சிமிர்னா திருச்சபையின் பேராயரான போலிகார்ப் அவர்களை கி.பி.155 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் நாள் சனிக்கிழமை அவரைக் கொலை செய்ய ரோம பேரரசால் தீர்மானிக்கப்பட்டது. கொலைக் களத்திற்கு அழைத்துக் கொண்டு போன இராணுவ அதிகாரி, பேராயர் மேல் இரக்கம் கொண்டவராய், 
                 "பேராயரே! நீர் ரோமச் சக்கரவர்த்தியே கடவுள் என்று சொல்லி கொடிய மரணத்தினற்கு தப்பித்துக் கொள்ளலாமே" என்றார். போலிகார்ப் பிரதியுத்திரமாக, "அன்புள்ளம் கொண்ட இராணுவ அதிகாரி அவர்களே, நான் கடந்த 86 ஆண்டுகள் என் கிறிஸ்துவுக்காய் வாழ்ந்தேன், ஊழியஞ் செய்தேன். எனக்கு இந்நாள் வரை எத்தீங்கும் செய்யாத என் ராஜாவை எப்படி நான் மறுதலிப்பேன்? என் அன்பரை எனக்குத் தெரியாது என்று எப்படி நான் கூற முடியும்? அன்பினால் என் ஆண்டவனுக்கு ஊழியத்தை நிறைவேற்றினேன். இப்போதும் அவருடைய அன்பின் கரத்தில் விமுவேனாக. என்  இரட்சகரையல்லாமல் நான் யாரையும் வணங்க முடியாது. நீங்கள் உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள். தாமதிக்க வேண்டாம்" என்று தைரியமாக கூறினார். 
அக்கினியில் போடப்பட்டுவதற்கு முன் முழங்காற்படியிட்டு, "ஆண்டவரே , இந்த நாளை, இந்த நேரத்தை நீர் எனக்குத் தந்ததற்கு நன்றி. உமக்காய்  என் வாழ்வின் கடைசி பரியந்தம் வாழ உதவி செய்தீரே, உமக்கு நன்றி" என்று மரணத்தை தமுவிக் கொண்டார்.

 எபிரேயர் 3.14 சொல்லுகிறது, "நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்."

Post a Comment

0 Comments