Ad Code

உருவாக்கும் வேதம் | சீகன் பால்கு

இந்தியாவிற்கு வந்த முதல் சீர்திருத்த மிஷனெரி பற்தொலமேயு சீகன் பால்குவிற்கு 6 வயதாக இருக்கும் போது, இவரின் தாயார் காத்ரீனா, மரிக்குமுன் தமது பிள்ளைகளை அழைத்து "அன்பு செல்லங்களே!  உங்களை நான் அநாதையாக விட்டு செல்லவில்லை. மிகப்பெரிய செல்வம் ஒன்றைத் தருகிறேன். அது நான் உபயோகித்த என் வேதாகமே. அதன் ஒவ்வொரு பக்கத்தையும் என் கண்ணீரால் நனைத்திருக்கிறேன். இந்த வேதாகமம் உங்கள் வாழ்க்கைக்கு நிச்சயம் வழிகாட்டும். வேத வசனங்கள் உங்களோடு பேசும், வேதத்தை வாசிக்க மறந்து வீடாதீர்கள்; வேதத்தை நேசிக்கப் பழகுங்கள்; அதுவே உங்கள் வாழ்வின் விளக்காயிருக்கும் " என்று வேதத்தை தன் பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டு இறைராஜ்யத்திற்குள் கடந்து சென்றார்கள்.

சீகன் பால்கு 09.07.1706 அன்று தமிழ்நாட்டிலுள்ள தரங்கம்பாடியை வந்தடைந்தார். 17.10.1708 அன்று புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கி 31.03.1711  அன்று தமிழில் வெளியிட்டார். பழைய ஏற்பாட்டில் ரூத் புத்தகம் வரையில் மொழிபெயர்ப்பை முடித்த போதும் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மரித்துப் போனார். 1728 ஆம் ஆண்டு முழு வேதாகமும் லூத்ரன் மிஷனெரிகளால் தமிழில் வெளியிடப்பட்டது. நமது தாய்மொழியில் இறைவனுடைய வார்த்தைகள் கிடைத்தது நமக்கு பாக்கியமே....


ஆண்டவரின் வார்த்தை நம்மை உருவாக்கி, நம் மூலம் பிறரையும் உருவாக்கும் வல்லமை கொண்டது. அது நம் வாழ்வில் நல்ல வழிகாட்டி, நம்மை முன்னேற்றும். "அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்" என்று சங்கீதக்காரரும் சொல்லுகிறாரே" (சங்கீதம் 119.72).


Post a Comment

2 Comments

Anonymous said…
கர்த்தரின் வேதம்
பக்தரின் கீதம்