பொறுமையோடு காத்திரு
சங்கீதம் 37 தாவீது தனது முதுமைக் காலத்தில் எழுதியதாகும். நீதிமான்கள் துன்பப்படும் போது துன்மார்க்கர் ஏன் செழிக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் கொடுக்கும் ஒரு அனுபவ சங்கீதமாகும். எபிரேய மொழியில் ஒரு அகரவரிசை (அகர வரிசை) அமைப்புக் கொண்ட சங்கீதம் இது.
இது நீதிமொழிகளைப் போலவே ஒரு அறிவுறுத்தல் பிரசங்கமாக செயல்படுகிறது. வாழ்க்கையை தற்காலிக நிகழ்காலத்திலிருந்து பார்க்காமல் நித்தியக் கண்ணோட்டத்தில் பாருங்கள் என்று வழிகாட்டும் ஞான சங்கீதமாகும்.
* கடவுளை நம்புங்கள்
* கவலைப்படாதீர்கள்
* நன்மை செய்யுங்கள்
* தெய்வீக நீதியை எதிர்நோக்குங்கள்
* பொறுமையாகக் காத்திருங்கள்
உலக அநீதியின் மத்தியில் விசுவாசத்தால் எவ்வாறு வாழ்வது என்பதைக் கற்பிக்கிறது. பொறுமையோடு, இறை பாதத்தில் நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டும். நீதிமான்கள் கைவிடப்படுவதில்லை. கடவுளின் நீதி மேலோங்கி, துன்மார்க்கர் கண்டிக்கப்படும்போது, தாழ்மையானவர்கள் பூமியை சுதந்தரிப்பார்கள்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments