Ad Code

தள்ளின கல்லே தலைக்கல் | Cornerstone | மத்தேயு 21:33-44

தள்ளின கல்லே தலைக்கல்
            மத்தேயு 21:33-44

சூழல்
ஜெருசலேமில் பவனிக்குப் பிறகு (குருத்தோலை ஞாயிறு) இயேசு பேசினார் ... 

உவமையின் விளக்கம்
தோட்டம் - பூமி
உரிமையாளர் - கடவுள்
தொழிலாளி - கடவுள் யூதர்களுக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார்
ஊழியர்கள் - தீர்க்கதரிசிகள், கடவுளின் ஊழியர்கள்
மகன் - இயேசு

1. முலைக்குத் தலைக்கல் லூக் 21.42

சங்கீதம் 118.22
யூதர்களால் இயேசு ஆலயத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. யூதர்கள் இயேசுவை தவறாக புரிந்து கொண்டனர்... ஆனால் அவர் தேவாலயத்தின் மூலக்கல்லாக ஆனார்.
எபேசியர் 2.20

உண்மை சம்பவம்
வில்லியம் கேரி ஒரு கூடுகையில் இருக்கும் போது, ஒரு நபர் அவரை நீ சூ செய்பவர் என்று அறிமுகப்படுத்தினார்.... கேரி தான் பேசும் போது நான் சூ செய்பவர் அல்ல, சூ பழுது பார்ப்பவர், தயாரிக்க தெரியாது என்று மறுமொழி கொடுத்தார்...  இந்த உலகம் அவரை தரக் குறைவாக பார்த்தது... ஆனால் அவர் தான் இந்தியாவில் மிஷன் பணி செய்தார்... அநேக மொழிகளில் வேதாகம மொழிபெயர்ப்பு செய்தார். யாரையும் குறைத்து மதிப்பிட கூடாது.  


2. தீர்ப்பிடும் தலைக்கல் லூக் 43-44

அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை .... லூக்கா 4 இல் தச்சன் மகன் என்று அவர்கள் அவரை நியாயந்தீர்த்தார்கள்.  ஆனால், அவர்தான் வருங்கால நீதிபதி என்று உணரவில்லை... அவர் தீர்ப்பிட வருவார்.

வேதாகம சம்பவம்
மோசே உதவி செய்ய நினைத்த போது, அவன் இனத்தாரில் ஒருவர் யாத்திராகமம் 2:14 இல் எங்கள் மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? என்று மோசேயிடம்  கேட்டார். ஆனால் ஆண்டவர் 40 ஆண்டுகள் வழிநடத்தும் தலைவராக மோசையை பயன்படுத்தினார்.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,
இயேசு கிறிஸ்து ஒருவரே நமது தலைக்கல். இந்த பூமியில் நீங்கள் புறக்கணிக்கப்படுகிறீர்களோ? அவரின் பிள்ளைகள் நம்மை அவர் வாயிலாக தலைக்கல்லாக பயன்படுத்துகிறார். இறையாசி உங்களோடிருப்பதாக.

Post a Comment

0 Comments