கொண்டாடுவோம் வலண்டைன் தினத்தை...
❤️கி.பி. மூன்றாம் நூற்றாண்டு ரோம சாம்ராஜ்யம் உலகமெங்கும் கொடிகட்டிப் பறந்த காலம். “யுத்த களத்திற்குச் செல்லும் போர்வீரர்களனைவரும் திருமணம் செய்து கொள்ள கூடாது” என்றது ரோமப் பேரரசு. கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்திய காலமது. கடவுள் மனிதனைப் படைத்ததோ பலுகிப் பெருகி பூமியை நிரப்பவே. ஆகவே பாதிரியார் வலண்டைன் ஐயா இரகசியமாக போர்வீரர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்.
🧡மேலும் “துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களை ஆறுதல்படுத்த இருதய வடிவ துண்டுகளை வெட்டி அனுப்பி அன்பை வெளிப்படுத்தினார். இந்தப் பாதிரியாரை ரோமானிய மதத்திற்கு மாற்றம் செய்வதற்காக ரோமப் பேரரசன் கிளண்டின்ஸ் II இவரிடம் பேசினான். இவரோ அரசனுக்குக் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்த முயன்றார். இதன் விளைவாக, தூக்குத் தண்டனை பாதிரியாருக்கு விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு கடவுளின்கிருபையால் சிறைத் தலைவனின் பார்வையற்ற மகள் ஜீலியாவைக் குணப்படுத்தினார்.
💛தூக்கிலடப்படுவதற்கு முந்தின நாள் “From Your Valentine” என்றெழுதி ஜீலியாவுக்கு வாழ்த்து அட்டை அனுப்பினார். பாதிரியார் தூக்கிலிடப்பட்டப் பின் உண்மையை உணர்ந்த ஜீலியாவும் அவள் குடும்பத்தார் உட்பட 44 பேர் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவராயினர். பிப்ரவரி 14 பாதிரியார் வலண்டைன் இறந்த நாளாக கருதப்படுகிறது.
💚எனவே கத்தோலிக்க, ஆங்கிலேய, லூத்தரன் திருச்சபைகள் பிப்ரவரி 14ஆம் தேதியை St. Valentine’s Day ஆக கொண்டாடி வந்தனர். 1969 ஆமாண்டிற்குப் பிறகு கத்தோலிக்கத் திருச்சபை இதை புனித நாளாக ஆசரிப்பதை விட்டது.
💙அருமையாக பாதிரியாரால் குடும்பங்கள் அன்று மலர்ந்தது. ஆனால் இன்று அவர் நினைவுநாளைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு ‘காதலர் தினம்’ என்ற பெயரில் அவரையும், கிறிஸ்தவத்தையும் கொச்சைப்படுத்துகின்றோம்.
💜அவர் காதலர்களை இணைத்து வைக்கவில்லை; மாறாக படைவீரர்கள் திருமணத்தைத் தடை செய்த அரசை எதிர்த்து வென்றார். அதுமட்டுமின்றி கிறிஸ்துவின் மெய்யன்பைப் பரப்பும் சீடராகச் செயல்பட்டார். நாமோ சாத்தானின் தந்திரத்தைப் புரிந்து கவனமாக வாழ்வில் அடியெடுத்து வைக்க வேண்டும்.
🖤தற்காலத்தில் பிப் 14 யாருக்கு லாபம் அளிக்கிறது என்றால் வியாபாரிகளுக்கே. ஏமாற்றமடையும் இளைஞர்களுக்கே நஷ்டம். பிப்14 ல் குடும்பங்கள் உருவாவதை விட, பாவமும் தற்கொலையும் அதிகமாக நடை பெறுகிறது. “திருமணம் தவறல்ல, திருமணத்திற்கு முன்னுள்ள காதல் தவறான வழியில் திசை திருப்பும்”. ஆணையும் பெண்ணையும் இணைத்து குடும்பத்தை மலரச் செய்வது கடவுள். மொட்டு அதுவாக மலரும் முன் நம் கைகளால் அதை மலரச் செய்தால் அது அழிவது போல், மனிதன் குறிப்பிட்ட வயதிற்கு முன் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு மலரச் செய்வதன் விளைவு அழிவே.
💞ஆதாமுக்குத் துணையைக் கொடுத்தவர் ஏற்ற காலத்தில் தரும் வரை மனிதன் காத்திருப்பது நன்று. “வந்தது காதல், போனது உறவு, கலைந்தது கனவு” என்று சொல்லும் நிலைக்கு வரும்முன் தெளிவாய் சரியான முடிவெடுப்போம். எதிர்பாலினருக்கு கிப்ட், டைம், பரிசு கொடுப்பதற்குப் பதிலாக, ஏழைகளுக்கு உதவி செய்யலாம்; குறைந்தது ஒருவருக்காவது நம் இயேசுவின் அன்பை சொல்லலாம்..
கொண்டாடுவோம் பிப் 14ஐ, காதலர் தினமாக அல்ல;
பாதிரியார் Rev.வலண்டைன் நினைவுதினமாக.
💌Letter from Meyego
0 Comments