Ad Code

Resolution | தீர்மானம்


தீ
ர்மானங்கள் என்ற பெயரிலே தான்
உலகத்தார் போல மாம்ச முயற்சியில்
கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு
சில காலம் சட்டவாழ்வு போலிருந்து
முடிவில் நிறைவேற்ற வில்லை என்று
மனத்தளர்வு வருடந்தோறும் உண்டோ?

சுயமாக முடிவெடுத்து நடந்திட அல்ல
தினமும் அவர் சத்தம்கேட்டு சித்தம்செய்யும் 
பிள்ளையாய் மகிழ்ந்து வாழ அழைக்கிறார்
குறுகிய கால ஒப்பந்தத்தில் அல்ல
உரிமை கொண்டாடும் நேச உறவோடு
நிரந்தர கிருபையால் நிறைத்து நடத்துவார் 

செபமும் வேத வாசிப்பும் எல்லாம்
சுய பெலமும் ஞானத்தினாலும் அல்ல
தினந் தோறும் அருளும் கிருபையின்
தூய ஆவியானவர் வழி நடத்துதலாலே
அவரது விருப்பம் பக்தி பரவசமல்ல
அழியாத பூரண அன்புடன் வாழ்வதே!!!

Post a Comment

3 Comments