பிரசவித்த பெண்கள் செய்யவேண்டிய ஸ்தோத்திர ஜெப வழிபாடு
(ஆரம்ப பாடலுக்கு அடுத்து அல்லது அறிவிப்புக்கு அடுத்து )
சர்வ வல்லையுள்ள கடவுள் தம்முடைய கிருபையினாலே பேறு காலத்துக்குரிய மிகுந்த ஆபத்தினின்று உங்களை (இவர்களை) இரட்சித்து, ஆரோக்கியமான பிரசவத்தை அருளிச்செய்திருக்கிறதினால், (நாம்) மனதார அவருக்கு நன்றி செலுத்தும்படிக்கு கூடி வந்திருக்கிறோம்.
சங்கீதம் 116 / 127
பிதாவுக்கும்..
வேண்டுதல் செய்வோமாக...
ஆ. ந. கர்த்தாவே எங்களுக்கு இரங்கும்
சபை. கிறிஸ்துவே எங்களுக்கு இரங்கும்
ஆ. ந. கர்த்தாவே எங்களுக்கு இரங்கும்
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே...
ஆ. ந. கர்த்தாவே, உம்முடைய அடியாளாகிய இந்தப் பெண்ணை இரட்சித்தருளும்.
சபை. தன் நம்பிக்கையை உம்மிடத்தில் வைத்திருக்கிறாள்.
ஆ. ந. இவர்களுக்கு பெலத்த அரணாயிரும்.
சபை. சத்துருவின் முகத்துக்கு இவர்களை மறைத்தருளும்.
ஆ. ந. கர்த்தாவே எங்கள் ஜெபத்தைக் கே
சபை. எங்கள் விண்ணப்பம் உம்மிடத்தில் சேருவதாக.
சர்வ வல்லையுள்ள கடவுளே, உமது அடியாளாகிய இந்த சகோதரியை பேறு காலத்துக்குரிய மிகுந்த வேதனையிலும், மோசத்திலும் நின்று, இரக்கமாய் காப்பாற்றியதற்காக தாழ்மையாய் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இரக்கமுள்ள பிதாவே, இருதயம் நைந்து வியாகுலப்படும் உமது அடியாளுக்கு ஆறுதலைக் கொடுத்தருளும். உமது சகாயத்தினாலே இம்மையில் சரீர ஆரோக்கியத்தோடு வாழ்ந்து, உமது சித்ததிற்கு ஏற்றப்படி நடக்கவும், மறுமையிலே நித்திய மகிமையைப் பெற்று அனுபவிக்கவும் கிருபைசெய்ய வேண்டுமென்று எங்கள் மீட்பராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
எங்கள் தந்தையாம் கடவுளே, உமது அடியாளாகிய இந்த சகோதரியை ஆசிர்வதித்து, நீர் அருளிச்செய்த குழந்தைக்காக உமது மகிமையுள்ள நாமத்தைப் புகழ்ந்து போற்றுகிறோம். மிகுந்த இரக்கமுள்ள ஆண்டவரே, இந்த சகோதரியும், இவள் கணவனும் உமது திருநாமத்திற்கு கனமும், தங்களுக்கு பேராசீர்வாதமும் உண்டாகத்தக்கதாய் இந்தக் குழந்தையை நீதியின் பாதையில் கவனமுடன் வழிநடத்த கிருபைசெய்யதருள வேண்டுமென்று எங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
பராபரனே, உமது வழிகள் மறைவானவை. உமது செயல்கள் அதிசயமானவை. நீர் வீணாக எதையும் உண்டாக்கவில்லை. உண்டாக்கினவைகள் அனைத்திலும் அன்புகூருகிறீர். உமது அடியாள்மீது இரக்கமாய் அன்புகூர்ந்து, இவர்கள் உமக்கு செலுத்துகிற இந்த நன்றிக்காணிக்கையை அங்கிகரித்து ஆசீர்வதித்தருளும். மிகுந்த அன்புள்ள இறைவா, உமது அடியாளுடைய குடும்பம் முழுவதும் நீர் வாக்குத்தத்தம் பண்ணினவைகளை மறுமையில் குறைவின்றி பெற்றுக்கொள்ளும்படி, இம்மையில் இவர்கள் உம்மை நேசிக்கவும், உமக்கு ஊழியஞ்செய்யவும் அனுக்கிரக்க வேண்டுமென்று உம்முடைய குமாரனும், எங்கள் மத்தியஸ்தருமாகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
(ஸ்தோத்திர காணிக்கை படைத்தால்)
தந்தை தன் பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ...
எந்த வேளையும் அவரோடு தங்கினால்
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே
எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே நீ...
இந்நாள் வரையிலே உன்னாதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது - எந்நாளுமே...
.....நடந்து கொண்டிருக்கும் ஆராதனையை தொடரலாம்.
0 Comments