வாழ்க்கையில் எதையும் ருசி பார்க்காமல்
வார்த்தையில் வித விதமாக அலங்கரிப்பு
இம்மியளவு விசுவாசம் உள்ளே இல்லாமல்
இலக்கிய வித்துவானாக அடுக்கும் சொற்கள்
அப்போவாடு பேசுகிறோம் என்பதை மறந்ததால்
அழகான வார்த்தை விளையாட்டு புதிராகவே
மறைவான மன்றாட்டில் பிதற்ற வழியில்லாமல்
மக்களிடையே தொனிக்கும் பாரம்பரிய எக்காளம்
துவளாமல் இறைநீதியை மறைத்து விட்டதால்
துதிபாமாலை குரங்கு கையில் பூமாலையாய்
திருவாளர் மனிதரல்ல என்பதை சிந்திக்காமல்
திருப்தியாக்கும் தொழிலில் நவீன கெஞ்சல்
உள்ளத்து இருந்து சுயநீதியின்றி ஏறெடுத்தால்
உண்மையில் சொற்போர் இறைக்குப் புகழே
ஆவியும் வார்த்தையும் இணைந்து வராவிடில்
ஆட்டம் கண்டிடும் வாழ்க்கையின் சாட்சியிலே
2 Comments
Really really amazing bro
ReplyDeleteReally super
ReplyDelete