இந்தியர் என்றாலே நம் மனதில் ஒரு தனி உணர்வு தான் . காரணம், இது இறைவன் நமக்கு அருளிய அருட்கொடை என்பேன். இந்திய மண்ணில் வாழ்வதே தனி சுகம் தான். இத்திரு நாட்டின் 74வது சுதந்திர தினநாளில், உங்கள் யாவருக்கும் உங்கள் மேயேகோ_வின் அன்பின் வாழ்த்துக்கள்.
🇮🇳தனிமனிதனுக்குள் சுதந்திரம் 2020🇮🇳 என்ற கருப்பொருளை நான் இவ்வாண்டு நிலைநிறுத்த ஆசிக்கிறேன். ஏனென்றால், நாடு விடுதலை பெற்று 74 ஆண்டுகளாகியும் ஒவ்வொரு தனிமனிதனும் ஏதோ ஒன்றுக்கு அடிமையாக காணப்படுகிறான். அதனால் தான், சுதந்திர நாட்டில் ஒவ்வொரு காரியத்திலும் பயமும், உண்மை இல்லாமையும், ஊழலும், அக்கிரமமும், உரிமை மறுப்பும் அல்லது கோழைத்தனமும் உள்ளது. தனிமனித இருள் தான் வாழ்வின் நன்மைகளை அனுபவிக்க விடாமல் தடுக்கிறது. இந்த இருள் ஒவ்வொரு தனிமனிதனிடமும் அகன்றால் மட்டுமே நம் நாட்டில் ஒளிமிகு நல்வாழ்வை காணமுடியும். இயேசு கிறிஸ்து என்னும் மெய்யான ஒளியே அந்த பிரகாசத்தை அளிக்க முடியும்.
நம் நாட்டிற்கு நற்செய்தி, நாம் அடிமைப்பட்டிருந்த போதோ, அல்லது சுதந்திரமான போதோ வந்தது அல்ல. மாறாக முதல் நூற்றாண்டிலேயே கடவுள் தம் திருத்தூதர் தோமையாரை இங்கு அனுப்பியுள்ளர்; நற்செய்தியை நம் முன்னோர்கள் கேட்டுள்ளனர். உலக வல்லரசு நாடுகளுக்கு கூட (உதாரணமாக அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன் ...) கிடைக்காத பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது.ஏன் நம் நாடு இன்றும் இருள் நிறை நாடாக உள்ளது என்று யோசித்து உள்ளோமா? "தனிமனித இருளை நீக்கி சுதந்திர பாதையில் நடத்த தனி நபர்கள் இல்லை" என்பது தான் என் பதில். அன்பின் பாலங்கள் தகர்ந்து போவதாலேயே தான் நம் நாட்டில் இன்றும் நான் சுதந்தரிக்க முடியவில்லை போலும். எத்தனை பேர் தனி நபரோடு நல்லுறவு வைத்துள்ளோம்? அவரின் இருள் அகற்ற ஒளியின் பாலமாக வாழ்கிறோம்? சிந்தித்து பார்ப்போம். பேச்சில் அல்ல, செயலில் காட்டுவோம்.
வேதமும் நம்மை அவ்வாறு தான் அன்பின் பாலமாக விசுவாசத்துடன் வாழ அழைப்பு கொடுக்கிறது. மிஷனரிகள் வாழ்க்கை வரலாறு நம்மை உத்வேகப்படுத்தட்டும். சுதந்திர போராட்ட தியாகிகள் போல் உயிர் துறந்தோர் பலர். நம் நாட்டிலுள்ள ஆத்துமாக்களுக்காக நம் பங்கு என்ன?
தனிமனிதனுக்குள் சுதந்திரம் என்றோ
அன்றே தாய்நாட்டில் சுதந்திர வாழ்வு!!!
By,
meyego
15/08/2020
0 Comments