இஸ்ரவேல் மக்கள் ஆசரித்த பண்டிகைகளுள் எக்காளப் பண்டிகையும் (Day of Trumpet Blasts) ஒன்றாகும்.
நியமங்கள் என்ன?
🎺 எபிரேய காலண்டரில் ஏழாம் மாதம் (எத்தானீம்) முதலாம் நாள் இப்பண்டிகை கொண்டாடப்படும்.
🎺 இது பரிசுத்த சபைகூடும் நாள்.
🎺 அந்நாளில் ஒரு வேலையும் செய்யலாகாது.
🎺 அந்த நாளில் எக்காளம் ஊத வேண்டும்.
🎺 கர்த்தருக்கு தகன பலியும் செலுத்த வேண்டும்.
🎺 அந்நாளில் அதைக் குறித்த வேத பகுதிகள் வாசிக்கப்பட்ட வேண்டும்.
நோக்கம் என்ன?
யூத மரபின்படி, ஏழாவது மாதத்தின் முதல் நாளில் அதாவது சிவில் ஆண்டின் புத்தாண்டு தினத்தன்று, பரிசுத்த சபை கூடுதல் இருக்க வேண்டும். விரும்பும் அனைவரும் எக்காளம்🎺ஊதி, மகிழ்ச்சியான புத்தாண்டு வந்துவிட்டதாகவும், பரிகாரத்தின் பெரிய நாள் (பாவ நிவாரணப் பண்டிகை) மற்றும் கூடாரப் பண்டிகை நாட்கள் நெருங்கிவிட்டன என்றும் அறிவிக்கும் நோக்கத்தில் ஆசரிக்கப்படும்.
எக்காளப் பண்டிகை வேதாகம பகுதிகள்
லேவியராகமம் 23. 24 - 25
எண்ணாகமம் 29. 1 - 6
எக்காளத்தின் பயன்பாடு என்ன?
வாயினால் ஊதப்படும் உலோகக் கருவி. மிருகங்களின் கொம்புகளில் செய்யப்பட்ட ஊதுகொம்பை போல வளைவாக இல்லாமல் இவை நேராக இருந்திருக்கலாம். ஆனால், இவை எப்படிச் செய்யப்பட்டிருந்தன என்று பைபிள் குறிப்பிடுவதில்லை.
பாளையங்களிலிருக்கும் இஸ்ரவேல் மக்களுக்கு அறிவிப்பு செய்வதற்காகவும், இசை இசைப்பதற்காகவும் இது பயன்படுத்தப்பட்டது. மக்களை ஒன்றுகூட்டுவதற்கும், ஒரு இடத்திலிருந்து புறப்படச் செய்வதற்கும், போர் அறிவிப்பு கொடுப்பதற்கும் வெவ்வேறு தொனிகளில் இவை ஊதப்பட்டன. (Ref. எண் 10.2; 2 நாளா 29:26; எஸ்றா 3:10)
யெகோவாவின் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டபோதும், அவர் மூலமாகச் சில முக்கியச் சம்பவங்கள் நடந்தபோதும் அடையாள அர்த்தத்தில் எக்காளம் முழங்கப்பட்டது என பரிசுத்த யோவான் தம் வெளிப்படுத்தின விசேஷத்தில் எழுதியுள்ளார். (1கொ 15:52; வெளி 8:7-11:15).
0 Comments