Ad Code

வேதாகம பண்டிகைகள் | The Feasts of Jews


சமயத்தின் அடிப்படையில் சில நாட்கள் அல்லது குறிப்பிட்ட காலத்தைக் குறித்துக் கொண்டு மகிழ்ச்சிக்குரிய வகையில் கொண்டாடப்படுவதைப் பண்டிகைகள் என்று கூறுகிறோம். வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகைகளின் தொடக்கமும், நோக்கமும், பொருளும் பிற மதங்களின் பண்டிகைகளிலிருந்து முற்றும் வேறுபட்டவை.  பண்டிகைகள் ஆசரிப்பு என்பது இஸ்ரவேல் மக்களுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட கட்டளைகளில் ஒன்றாகும். חַ֣ג (chag) என்ற எபிரேய வார்த்தைக்கு "ஒன்றுகூடி விழாவெடுப்பது" (Feast) என்று பொருள்.

பண்டிகைகள்
        ⚡கடவுளின் வழிநடத்துதலை நினைவுகூர
        ⚡கடவுள் செய்த நன்மைகளுக்கு நன்றிகூர
        ⚡கடவுளின் சமுகத்தில் யாவரும் ஒன்றுகூட
          
அப்பண்டிகைகளின் வாயிலாக, தமது மக்களின் வாழ்கையில் கடவுள் ஈடுபட்ட நிகழ்ச்சிகளையும் அவர் கொடுத்த நன்மைகளையும் நினைவு கூர்ந்து குறிப்பிட்ட காலங்களில் சில விழாக்களை இஸ்ரவேல் மக்கள் கொண்டாடினர்.  நாகூம் 1.15 சொல்லுகிறது, "...யூதாவே, உன்பண்டிகைகளை ஆசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து..." பண்டிகை காலங்களில் தேவனுக்குப் பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தி, தாங்கள் பெற்ற சிலாக்கியத்தை உளமார்ந்த மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தினர் (எண் 9:7).

சிலரிடையே உண்ணுதலும், குடித்தலும், களியாட்டமும் அக்காலங்களில் காணப்பட்டது (யாத் 32). மக்கள் தங்களது மனவருத்தத்தை வெளிப்படுத்தும் வகையிலும் சில பண்டிகைகளைக் கொண்டாடினர். பக்திமிக்க யூதர்கள், தங்களுடைய பாவத்தின் பொருட்டு பலிசெலுத்தி, கவனத்தோடு அக்கற்பனைகளைக் கைக்கொண்டனர். நம்முடைய செயல்பாடுகள் கடவுளுக்கு பிரியமாக இல்லாவிட்டால், ஏசாயா 1.14 இல் கடவுள் சொல்லுகிறார்: "உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்." ஆகவே பண்டிகையை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும்.

யாத்திராகமம் 23.14 இல் கடவுள் சொன்ன கட்டளை என்னவென்றால், "வருஷத்தில் மூன்றுதரம் எனக்குப் பண்டிகை ஆசரிப்பாயாக." அந்த மூன்று பண்டிகைகள் எவையென்றால்,

            1. பஸ்கா பண்டிகை 
            2. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை
            3. முதற்பலனாகிய கதிர்கட்டு பண்டிகை

இவை தவிர இஸ்ரவேல் மக்கள் கொண்டாடிய பண்டிகைகளாவன: 
      
            4. வாரங்களின் பண்டிகை (அறுப்புக்கால பண்டிகை)
            5. கூடார பண்டிகை (சேர்ப்புக் கால பண்டிகை)
            6. பெந்தெகொஸ்தே பண்டிகை 
            7. ஓய்வுநாள் பண்டிகை
            8. எக்காளப் பண்டிகை 8 click here
            9. பாவநிவாரண பண்டிகை
            10. பூரிம் பண்டிகை.

குறிப்புகள்: 

அறுப்புக் காலம் துவங்கும் போது, அறுப்பு கால பண்டிகையும், அது நிறைவடையும் போது சேர்ப்பு கால பண்டிகையும் ஆசரிக்கப்பட்டது. 

பொதுவாக கோதுமை அறுப்புக்குப் பின் (7x7=49) 49 நாட்களுக்குப் பின்னர், 50 வது நாள் பெந்தேகோஸ்தே பண்டிகை ஆகும்.


இவற்றைக் குறித்து சற்று விரிவாக வரும் பதிவுகளில் படிக்க இருக்கிறோம். எக்காளப் பண்டிகை குறித்து வாசிக்க click here

வேதாகம பண்டிகைகள்
வேதாகம பண்டிகைகள் சுருக்க விவரம்



Post a Comment

1 Comments