அன்பானவர்களே... அன்பின் வாழ்த்துகள்...
அட்வெந்து காலம் கிறிஸ்துவ காலண்டரின் துவக்க காலம். அட்வெந்து இரண்டாம் ஞாயிறு திருமறை ஞாயிறாக ஆசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு "இரண்டாம் ஆண்டு மேயேகோ திருமறை ஞாயிறு தேர்வு" (Meyego Scripture Sunday Exam) நடத்த முயற்சிக்கிறோம். இது இன்னும் அனைவரின் வேத தியானத்தை ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம். வினாத்தாள் இந்த லிங்கில் உள்ளது
விதிமுறைகள்
1. பரிசுத்த வேதாகமத்தில் யோசுவா முதல் 2 சாமுவேல் வரை 5 புத்தகங்கள்முழுவதும் மட்டும். கேள்வி - பதில் முறையில் வினாக்கள் இருக்கும்.
2. 2025 டிசம்பர் 07 ஆம் தேதி மாலை 06.00 மணிக்கு (திருமறை ஞாயிறு) இந்த meyego வலைதளத்தில் கேள்விக்கான லிங்க் ஷேர் செய்யப்படும். டிசம்பர் 14 (ஞாயிறு) ஆம் தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும்.
3. நீங்கள் லிங்க் மூலம் டவுன்லோட் செய்யும் pdf இலுள்ள வினாக்களுக்கு ஒரு பேப்பரில் பதில் எழுதி தபாலில் அனுப்ப வேண்டும். அனுப்பிய விபரத்தை 9486810915 எண்ணிற்கு தெரியப்படுத்தவும்.
4. சரியாக எழுதியவர் மற்றும் பங்கு பெற்றோர் என்று "இரண்டு விதத்தில் பரிசுகள்" உண்டு. குலுக்கல் முறையில் 2 நபர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
5. முழு மதிப்பெண்கள் பெறாவிட்டாலும், நீங்கள் அனுப்பினால் பங்கு பெற்றோருக்கான பரிசு குலுக்கல் முறையில் உண்டு. ஆகவே நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
6. அனுப்ப வேண்டியவை:
பதில் எழுதிய பேப்பர்
உங்கள் பெயர்
ஃபோன் எண் அல்லது இமெயில் ஐடி
முழு முகவரி.
7. அனுப்ப வேண்டிய முகவரி
Meyego Centre
Eden Store
Sankarankoil Main Road
Ramayanpatti - 627358
வாட்ஸ்அப் எண் - 9486810915
இமெயில் - meyegoofficial@gmail.com
பதிவு கட்டணம் ஏதும் இல்லை. முடிந்தவரை பாராமல், கூகுள் மற்றும் மற்றவரின் உதவியின்றி உங்கள் வேத அறிவை சோதித்துப் பார்க்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுங்கள். இறையாசி உங்களோடிருப்பதாக. ஆமென்.

0 Comments