சிறகை விரித்து செட்டைகளை அடித்து பறக்கும் காலம் இளம் பருவம். ஒரு நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அனைத்து வகையான துறைகளிலும் இளம் வாலிபர்கள் சாதித்துக் கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது. எனவே இத்தகைய இளைஞர்களின் பிரச்சனைகளையும், செயல்பாடுகளையும் கவனத்தில் கொள்ளும்படி வழிவகுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
1999ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டு, 2000ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி அமெரிக்காவில் இளைஞர் தினம் கொண்டாடப்பட்டிருக்கிறது. தற்போது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
பரிசுத்த வேதம் சொல்லுகிறது, "இளமையில் நுகம் சுமப்பது மனிதருக்கு நலமானது!" (புலம்பல் 3.27). ஆம் நிறைய காரியங்களை கற்றுக்கொள்ளவும், சுறுசுறுப்பாக உழைக்கவும், புதியவற்றை படைக்கவும் சிறந்த காலம் இந்த இளம்பிராயம். இந்த காலத்தில் வாழ்வின் மகிழ்வு உச்சத்தை தொடும் வண்ணம் வாழ்வோம். உண்மைக்கும் உயர்வுக்கும் வேறுபாடில்லை; இளமையில் நுகம் சுமந்தாலும், முதுமையில் சொந்த காலில் நிற்கலாம்.
வாலிபம் வாழ்வதற்கே...
இளமை இன்பத்தோடிருக்க...
0 Comments