சதுசேயர்கள் என்பவர்கள் இஸ்ரவேல் நாட்டில் இருந்த மதக் குழுக்களில் ஒரு பிரிவினர். சாதோக்கு என்னும் பெயரிலிருந்து மருவி வந்ததே சதுசேயர்கள் என்னும் சொல்லாகும். சாதோக்கு (Sadhok) என்னும் பெயருடைய ஆசாரியனின் மரபில் தோன்றியவர்கள் இப்பெயர் பெற்றனர். பாபிலோனிய சிறையிருப்புக்கு பின்பாக இவர்கள் பெரும்பாலும் ஒரு அரசியல் கட்சி போன்று செயல்பட்டனர்.
இவர்களின் அந்தஸ்து என்ன?
✅ சமூக ரீதியாக, சதுசேயர்கள் பரிசேயர்களை விட மேல்தட்டு மற்றும் பிரபுத்துவவாதிகள். Upper Class என்ற நல்ல நிலையில் வாழ்ந்து வந்தனர்.
✅தலைமை ஆசாரியர்களும் பிரதான ஆசாரியரும் சதுசேயர்களாக இருந்தனர், அனைத்து ஆசாரியர்களும் சதுசேய நம்பிக்கை கொண்டவர்கள் எனலாம்.
✅ சதுசேயரின் அதிகார இடம் எருசலேமில் உள்ள ஆலயமாக இருந்தது.
✅ யூதர்களுடைய ஆலோசனைச் சங்கத்தில் தலைமை பொறுப்பபில் இருந்தனர்.
✅ பரிசேயர் போன்று சதுசேயர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இல்லை. ஏனென்றால், சதுசேயர்கள் ரோமாபுரியுடன் நட்பாக இருந்தனர், பரிசேயர்களைக் காட்டிலும் ரோமச் சட்டங்களுக்கு இடமளித்தனர்.
✅ உயர்ந்த நன்னெறியைக் கடைப்பிடித்தனர். நீதிநெறிக்கும், ரோம அரசின் சட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றும் போதித்தனர்.
இவர்களது நம்பிக்கை என்ன?
⚡புனித நூலான எபிரேய வேதத்தின் முதல் ஐந்து ஆகமங்களை மாத்திரம் (ஆதியாகமம் - உபாகமம்) நம்பினர்.
⚡தேவதூதர்கள், சாத்தான், சொர்க்கம், மற்றும் நரகம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லை.
⚡ மனித வரலாற்றின் இறுதிக்காலம் குறித்தும், தேவன் தலையிட்டு எல்லாவற்றையும் அவரே முடிவு கட்டுவார் என்பதை மறுத்தனர்.
⚡ மனிதன் மரித்த பின் கடைசி நாட்களில் உயிர்த்தெழுவான் என்னும் கொள்கையிலும் இவர்களுக்கு உடன்பாடு இல்லை.
⚡மரணத்திற்கு பின்பு, கடவுளின் நியாயத்தீர்ப்பின் படி நித்திய வாழ்வு உண்டு என்ற நம்பிக்கை இல்லை. ஏனென்றால் இறந்த பின்பு ஆத்மா நீங்கி விட்டடது என்று நம்பினர்.
⚡ நியாயப்பிரமாணத்திலும், பாரம்பரியச் சடங்குகளிலும் தேவனுடைய சித்தம் விளங்குகிறது என்ற கொள்கையில் வைராக்கியம் உடையவர்கள்.
⚡மேலும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்றும் நம்பினர்.
வேதாகமத்தில் இவர்கள்?
மதத்தை விட சதுசேயர்கள் பெரும்பாலும் அரசியலில் அதிக அக்கறை கொண்டிருந்ததால், தேவையற்ற ரோமர்கள் கவனத்தை அவர் கொண்டு வரக்கூடும் என்று அஞ்சத் தொடங்கும் வரை அவர்கள் இயேசுவை கண்டுகொள்ளாமல் புறக்கணித்தனர். பெரும்பாலும் இந்த சதுசேயர்கள் தனியாக இயேசுவை சந்திக்காமல் பரிசேயர்களோடு சேர்ந்து சென்றதை தான் வேதத்தில் வாசிக்க முடிகிறது.
மாற்கு 12.18
மத்தேயு 22.23
லூக்கா 20.27
சிந்தனைக்கு...
அப்போஸ்தலர் 5.17-18 ... பிரதான ஆசாரியரும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து, அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள். முன்மாதிரியாக வாழவேண்டிய இவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது.
1 Comments