Ad Code

Pharisees | பரிசேயர்கள்

பரிசேயர்கள் என்பவர்கள் இஸ்ரவேல் நாட்டில் இருந்த ஒரு பிரிவினர். யூத மதக் குழுக்களில் ஒரு சாரார். pərîšayyâ என்ற எபிரேய பின்னணியிலான அரமேய வார்த்தையின் அர்த்தம் பிரித்தெடுக்கப்பட்டவர்கள் (one who is separated). அதற்கேற்ப அவர்கள் சமுதாயத்திலிருந்து பிரிந்து வாழ்ந்தனர். சதுசேய, பரிசேய பிரிவுகள் பாபிலோனிய சிறையிருப்புக்கு பின் உண்டாகின. மல்கியா மற்றும் மத்தேயு நூல்களுக்கு இடைப்பட்ட அமைதியின் காலக்கட்டத்தில் இவை வளர்ச்சி பெற்றன.


இவர்களின் அந்தஸ்து என்ன? 

        ✅ யூத மக்களின் மத்தியில் சிறந்த பெயரையும், மேன்மையையும் பெற்றிருந்தனர். Middle Class என்ற நல்ல நிலையில் வாழ்ந்து வந்தனர். 

        ✅ யூதர்களுடைய ஆலோசனைச் சங்கத்தில் ஆதிக்கம் செலுத்தத்தக்கபடி பதவி வகித்தனர்.

         ✅ சதுசேயரின் அதிகார இடம் எருசலேமில் உள்ள ஆலயமாக இருந்தாலும் பரிசேயர்கள் ஜெப ஆலயங்களைக் கட்டுப்படுத்தினார்கள்.

           ✅ இஸ்ரவேல் நாட்டின் சமயத்தை தங்களுடைய ஆளுகைக்குள்ளாக வைத்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் அவர்கள் செயல் புரிந்தனர். 

         ✅  பரிசேயர்கள் பொதுவான உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளாகவும், மக்களின் மரியாதையையும் கொண்டிருந்தனர்.

           ✅ உயர்ந்த நன்னெறியைக் கடைப்பிடித்தனர். நீதிநெறிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றும் போதித்தனர். 


இவர்களது நம்பிக்கை என்ன?

          ⚡புனித நூலான எபிரேய வேதத்தின் அனைத்து (ஆதியாகமம் - மல்கியா) புத்தகங்களையும் நம்பினர்.    

           ⚡தேவதூதர்கள், சாத்தான், சொர்க்கம், மற்றும் நரகம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

         ⚡ மனித வரலாற்றின் இறுதியில் தேவன் தலையிட்டு எல்லாவற்றையும் அவரே முடிவு கட்டுவார் என்ற நம்பிக்கையடையவர்களாக அவர்கள் விளங்கினர்.

         ⚡ மனிதன் மரித்த பின் கடைசி நாட்களில் உயிர்த்தெழுவான் என்னும் கொள்கையிலும் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். சதுசேயரோ இவ்வுண்மையை நம்பவில்லை.

          ⚡மரணத்திற்கு பின்பு, கடவுளின் நியாயத்தீர்ப்பின் படி நித்திய வாழ்வு உண்டு என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர்.

         ⚡ நியாயப்பிரமாணத்திலும், பாரம்பரியச் சடங்குகளிலும் தேவனுடைய சித்தம் விளங்குகிறது என்ற கொள்கையில் வைராக்கியம் உடையவர்கள். 

          ⚡மேலும் அந்த நியாயப்பிரமாணத்திற்கு விளக்கம் அளிப்பதற்குத் தாங்கள் உரிமைபெற்றவர்கள் என்றும் நம்பினர்.

          ⚡தசம பாகம் கொடுப்பதில் தவறாது இருந்தனர். தசமபாகம் தருவதில் உறுதியுடன் விளங்கி, தேவனுக்கு உண்மையுள்ளவர்கள் என்பதை வெளிப்படுத்தினர்.

         ⚡ பரிசேயர்கள் மற்ற இன மக்கள் பெரும்பாலும் யூதர்களாக மாறுவதை எதிர்த்தனர். குறிப்பாக ரோம அரசினர் யூதர்களாக தங்களை அடையாப்படுத்துவதை இவர்கள் விரும்பவில்லை. 


வேதாகமத்தில் இவர்கள்?

              சதுசேயர்களைக் காட்டிலும் இயேசு பரிசேயர்களுடன் அதிக மோதல் தொடர்புகள் கொண்டிருந்தார் எனலாம். அநேகமாக அவர்கள் முன்னாள் வாய்வழி மரபுக்கு முன்னுரிமை அளித்ததன் காரணமாக இருக்கலாம்.

              மாற்கு 7:8; 7:1–23.

              மத்தேயு 9:14; 15:1–9; 23:5, 16, 23.

              லூக்கா 11:42.

              யோவான் 8; 12.

சிந்தனைக்கு....

        வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 5.20

சதுசேயர்கள் குறித்து வாசிக்க click here



Post a Comment

4 Comments