Ad Code

குறைவிலும் நன்மை செய் | Doing good when you have struggles

மருத்துவர் மேரி வர்க்கிஸ் (1925 - 1986) அவர்கள், வேலூர் CMC மருத்துவமனையில் உருக்குலைந்த உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யும் நிபுணர். நன்றாக சேவை செய்த அவருக்கு, 1954 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தில் அவருடைய கால்கள் செயலிழந்து போயின (spinal cord injury). ஆகவே, சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. இதினிமித்தம் மனதளவில் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டார். 

அவரோடு பணிபுரிந்த இன்னொரு மருத்துவர் பவுல் பிராண்ட் அவர்கள், Dr. வர்க்கீஸ் அவர்களை,  குஷ்டரோகத்தால் உருக்குலைவுக்குள்ளான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்படி அழைத்தார். அவரோ, மிகுந்த தயக்கத்துடன், "என்னால் இது எப்படி சாத்தியமாகும்? நான் இதை செய்யும் நிலைமையிலா இருக்கிறேன்?"  என்று வினவினார். 
மருத்துவர். மேரி வர்க்கிஸ்

உடனே Dr.பிராண்ட் அவர்கள் "நீங்கள் கால்களால் அறுவை சிகிச்சை செய்வதில்லையே" என்றார். இந்த வார்த்தைகள் ஒரு தாக்கத்தை அவர் வாழ்வில் கொண்டு வந்தது. அதற்குப் பிறகு, கடவுளை சார்ந்து ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகளை வெற்றியாக செய்தார். 

அவர் 1966 இல் மறுவாழ்வு நிறுவனத்தைத் (Rehabilitation Institute) தொடங்கினார். மேலும் நாட்டின் முதல் முழு செயல்பாட்டு உடல் மறுவாழ்வு பிரிவுக்கு (physical rehabilitation unit) தலைமை தாங்கினார். முதுகெலும்பு காயம், தொழுநோய் மற்றும் மூளை காயம் உள்ளவர்களுக்கு முதன்மையாக மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் அவர் ஈடுபட்டார்.

அனேகருடய வாழ்வில் ஒளியேற்றியதுமல்லாமல், தன் மனதளவில் மகிழ்ச்சியும், மனநிறைவும் பெற்றார். அவரது சேவையைப் பாராட்டி, இந்திய அரசு 1972 ஆம் ஆண்டு உயரிய விருதான பத்ம ஶ்ரீ விருதை வழங்கி அவரைக் கௌரவித்தது. 

இழப்புகள் இறைத்திட்டத்தை மாற்ற இயலாது.
இறை நம்பிக்கையோடு முடிந்ததை செய்யும் போது இறைநாமம் மகிமைப்படும்.

திருமறை கற்றுத்தருகிறது:

தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்... (நீதிமொழிகள் 11.17). நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை... (நீதிமொழிகள் 19.22).

Post a Comment

0 Comments