Ad Code

இந்திய பொறியாளர் தினம் | National Engineer's Day

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 அன்று இந்திய பொறியாளர்கள் தினம் (National Engineer's Day) கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த சிவில் இன்ஜினியர் என்று கருதப்படும், பாரத ரத்னா. சர். மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் (Bharat Ratna. Sir. Mokshagundam Visvesvaraya) பிறந்த நாளை முன்னிட்டு இத்தினம் ஆசரிக்கப்படுகிறது.
National Engineer's Day

யார் இவர்?

மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா அவர்கள் 1860ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி கர்நாடக மாநிலம், சிங்கபல்லபுரா மாவட்டத்தின் முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்.

இவர் அணை கட்டும் திட்டமிடலில் சிறந்தவராக, பொருளாதார நிபுணராக மற்றும் அரசியல்வாதியாக தன் வாழ்நாளில் சிறந்த திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

அவர் தானியங்கி வெள்ளத்தடுப்பு அமைப்பு முறையை (Automatic weir water floodgates) வடிவமைத்து காப்புரிமை பெற்றார், முதன்முதலில் புனே 1903 கடக்வாஸ்லா நீர்த்தேக்கத்தில் நிறுவப்பட்டது. 

எம். விஸ்வேஸ்வரய்யா 1912 முதல் 1918 வரை மைசூரின் திவானாகவும் இருந்தார். அவர் மைசூர் மாநிலத்தை "மாதிரி மாநிலமாக" மாற்றினார்.

அவர் மைசூரில் கிருஷ்ண ராஜா சாகரா அணை கட்டும் தலைமைப் பொறியாளராகவும், ஹைதராபாத் நகரத்திற்கான வெள்ளப் பாதுகாப்பு அமைப்பின் தலைமை வடிவமைப்பாளராகவும் இருந்தார். 

சமுதாயத்தில் அவரது சிறந்த பங்களிப்பின் காரணமாக, இந்திய அரசு 1955 ஆம் ஆண்டில் 'பாரத ரத்னா' விருதை இவருக்கு வழங்கியது. 

அவருக்கு மன்னர் ஜார்ஜ் V இன் பிரிட்டிஷ் நைட்ஹூட் வழங்கப்பட்டது, எனவே அவருக்கு "சார்" என்ற மரியாதை உண்டு.

இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்பட்ட இவர் 1962ஆம் ஆண்டு மறைந்தார்.

சுருக்கமாக சொன்னால், கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த தேசத்தை உருவாக்குபவர்களில் ஒருவராக கருதப்பட்ட Sir. MV ஒரு முன்னோடி இன்ஜினீயராக திகழ்கிறார்.

Post a Comment

0 Comments