Ad Code

இழப்பிலும் இறைப்பணி | God's Work in the Midst of Troubles

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 1270 ஆம் ஆண்டு பாய்மரக்கப்பல் ஒன்று கடற்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அநேகர் மாண்டனர். உயிர் தப்பிய ஒரு சிலரில் மரே என்ற குருவானவர் ஒருவர். இதில் அவரது மனைவி, பிள்ளைகள் எல்லாரும் மரித்து விட்டார்கள் .ஒரு புதிய தீவில் கரை சேர்ந்த அவரால் அந்த துயர சம்பவத்தை  தாங்க முடியவில்லை. நான் அனாதை ஆவதற்கு ஆண்டவர் தான் காரணம் என்று ஆண்டவரை மறுதலித்து அப்புதிய தீவில் வாழ்நாளை கழிக்கவும், மனம் போல் வாழவும் எண்ணியவராக, குழம்பி போயிருந்தார்.

மறுநாள் மனதில் கலக்கத்தோடு தெருவில் சென்ற போது குரு. மரே ஒரு மனிதரை சந்தித்தார்.  இருவரும் பேச பேச இவரைக் குறித்து அறிந்து கொண்ட அந்த மனிதர் "உமக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன்'' என்றார். "என்னை உனக்குத் தெரியுமா?" என்று போதகர் மரே கேட்க, "ஐயா, இயேசுவை பற்றி நான் சிறிது அறிந்து வைத்துள்ளேன். என் மனைவி வேத வசனங்களை வாசித்து எனக்கு சொல்லுவாள். எனது வீட்டில் தான் சபையாக கூடி ஆராதிக்கிறோம். ஆனால் வேதத்தைப் பற்றி போதிக்கவோ, பிரசங்கிக்கவோ யாரும் கிடையாது. ஆகையால் எங்களோடு நிலையாக தங்கி இருந்து ஊழியம் செய்யும் போதகரை தாரும் என நீண்ட நாங்களாக ஜெபித்து வந்தோம். அதே போன்று நீங்கள் இன்று வந்துள்ளீர்கள்'' என்றான். 

போதகர் மரே கர்த்தருடைய வழி நடத்துதலை அறிந்து அங்கேயே தங்கி பணிசெய்தார்.  தனக்கு வந்த பாடுகள் மற்றும் பிரச்சனைகளின் காரணத்தை இந்த இறைமனிரால் அந்த பாடுகளின் நேரத்தில் அறிந்து கொள்ள முடியவில்லை. தனக்கு இப்படிப்பட்ட பாடு வரவில்லை என்றால் இங்கு நான் வந்திருக்க மாட்டேன் என்று தற்போது புரிந்து கொண்டார். தன் எதிர்மறை சிந்தனைகளை மாற்றிக் கொண்டு, கடவுள் அழைத்த அழைப்பில் உறுதியாயிருந்து கடவுளின் ஊழியத்தை  நிறைவேற்றினார். அந்த தீவே அவருக்கு குடும்பமாக மாறியது.

ரோமர் 8. 28 சொல்லுகிறது, "அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்."

Post a Comment

0 Comments