IHS என்ற பதத்தை அநேக இடங்களில் குறிப்பாக ஆலயங்களில் பார்த்திருக்க வாய்ப்புண்டு. இதன் உண்மையான அர்த்தம் என்ன? ஏன் இதைப் பயன்படுத்துகிறார்கள்? என்று பார்க்க இருக்கிறோம். முதலில் IHS என்பது, எப்படி தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்று பார்ப்போம். அப்போது தான் நாம் தவறாக யாருக்கும் சொல்லமாட்டோம். அடுத்து சரியான விளக்கத்தை காணலாம்.
தவறான புரிதல்கள்
1. சிலர் லத்தீன் மொழியில் Iesus Hominum Salvator (Jesus the Savior of Humankind) என்ற வரியைக் குறிப்பிட்டு "மனிதகுலத்தின் மீட்பர் இயேசு" என்று அர்த்தம் கொடுக்கிறார்கள்.
2. சிலர் In hoc signo (By this sign you shall conquer) அதாவது "இந்த அடையாளத்தால் நீங்கள் வெல்ல வேண்டும்" என்று மில்வியான் பிரிட்ஜ் போரின் போது கிபி 312 ஆம் ஆண்டு கான்ஸ்டன்டைன் பேரரசருக்கு வெளிப்பட்ட வார்த்தை என்கின்றனர்.
3. சிலர் IHS என்றால் In His Service, அதாவது, "அவருடைய சேவையில்" என்று விளக்கம் கூறுகின்றனர்
சரியான விளக்கம்
உண்மையில் IHS என்ற பதம், கிரேக்க மொழியில் இயேசுவின் பெயரில் வரும் முதல் மூன்று எழுத்துக்களாகும். அதாவது ΙΗΣΟΥΣ என்ற கிரேக்க பெயரில் வரும் Iota - Eta - Sigma என்ற மூன்று எழுத்துக்களாகும்.
IHS என்பது குறியீட்டு சுருக்கம் (Symbolic abbreviation) ஆகும். இது மோனோகிராம் (monogram) அல்லது கிறிஸ்டோகிராம் (Christogram) எனப்படுகிறது. இவ்வாறு, IHS சில நேரங்களில் சிலுவை அல்லது பிற குறியீடுகளுடன் இணைந்து இயேசுவின் பெயருக்காக சுருக்கமாக பயன்படுத்தப்படுகிறது.
0 Comments