Ad Code

உலக தற்கொலை தடுப்பு தினம் | International Suicide Prevention Day


சர்வதேச அமைப்பு (IASP) மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியன இணைந்து 2003ஆம் ஆண்டில் செப்டம்பர் 10ஆம் தேதியை உலக தற்கொலை தடுப்பு தினமாக (WSPD) அனுசரிக்க பிரகடனம் செய்தது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கிறார். தற்கொலையில் இறப்பவர்களின் எண்ணிக்கை, கொலைகள் மற்றும் போர்களின் மூலம் உயிரிழப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. WHO அறிக்கையின்படி, இந்தியாவின் தற்கொலை விகிதம் 2016 ஆம் ஆண்டில் 100,000 பேருக்கு 16.5 தற்கொலைகளாக இருந்தது. இது உலகளாவிய தற்கொலை விகிதமான 10.5 ஐ விட அதிகமாகும். 

வேதாகமம் தற்கொலையை கொலைக்கு சமமாக கருதுகிறது, அதுதான் சுயக்கொலை (Self Killing). ஒரு நபர் எப்போது, ​​எப்படி இறக்க வேண்டும் என்பதை கடவுள் மட்டுமே தீர்மானிக்க வேண்டும். சங்கீதக்காரன், "என் காலங்கள் உம் கையில்(சங்கீதம் 31:15) என்று சொல்வது போல் நாம் சொல்ல வேண்டும் 


கடவுள் உயிரைக் கொடுப்பவர். அவர் கொடுக்கிறார், எடுத்துச் செல்கிறார் (யோபு 1:21). தற்கொலை, ஒருவரின் சொந்த உயிரைப் பறிப்பது, தெய்வீகமற்றது, ஏனென்றால் அது கடவுளின் வாழ்க்கை வரத்தை நிராகரிக்கிறது. எந்த ஆணும் பெண்ணும் கடவுளின் அதிகாரத்தை தங்கள் சொந்த வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. 

தற்கொலை செய்வதை தடுக்க அதை பற்றிய விழிப்புணர்வை பரப்புவதில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டால்தான் இதை நம் சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஒழித்து விட முடியும். நீங்களும் நானும் மற்றவர்களோடு நேரத்தை செலவிடுகிறோமா?

 Our presence with them reduce their depression;
 Our kind-words comfort them as a medicine;
 Our hepls encourage them to recover themselves.

 

Post a Comment

0 Comments