வரலாறு
திருநெல்வேலி திருமண்டலம் வாலிபர் ஐக்கிய சங்கமானது (Tirunelveli Diocesan Youth Association) 1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் நாள் அருட்பெருந்திரு. செல்வின் பேராயரவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பிஷப் செல்வின் மற்றும் இளைஞர்களிடையே பணியாற்றிய பிற முன்னோடிகள் திருமண்டலத்தில் ஒரு இளைஞர் நலத்துறை வேண்டுமென்று உணர்ந்து, செயல்பட்டதின் விளைவாக திருநெல்வேலி திருமண்டல இளைஞர் சங்கம் உருவானது. திரு. டி.எஸ். ஜார்ஜ் முல்லர் (செயின்ட் ஜான்ஸ் கல்லூரி, பாளையங்கோட்டை)
1950 ஆம் ஆண்டு முதல் வாலிபர் மாநாடு பாளையங்கோட்டையில் மே 27 முதல் மே 30 வரை நடைபெற்றது.
1985ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் திருமணடலத்தில் ஒரு தனித்துறையாக இயங்கி வருகின்றது. 75 ஆண்டுகளாக வளர்ந்து பெருகி, 2023 ஆம் ஆண்டு பவள விழா கொண்டாடி கொண்டு இருக்கிறது. திருநெல்வேலி திருமண்டல வாலிபர் ஐக்கிய சங்கத்தின் அலுவலகமானது நூற்றாண்டு மண்டப வளாகத்தில் இருக்கிறது. அதன் அருகே வாலிபர் சங்க இயக்குனர் ஐயரவர்களின் அவர்களின் குருமனையும் அமைந்துள்ளது.
இலட்சியம்
விசுவாசம்
ஐக்கியம்
ஊழியம்
நோக்கம்
திருமண்டலத்தின் அனைத்து சபைகளிலுமுள்ள வாலிப சகோதர, சகோதரிகளிடையே வாலிபர் ஐக்கிய சங்கங்களை அமைத்து, வாலிபர்களை ஜெபம், வேத வாசிப்பு, சுவிசேஷ ஊழியம் மற்றும் சமூக சேவை முதலியவைகளில் பழக்குவித்து வளர்ப்பதாகும்.
சங்கத்தின் பணிகள்
திருமண்டல பாடசாலை & கல்லூரிகளில் பயிலும் இளம் வாலிபர்களை சந்தித்து ஆலோசனை வழங்குதல்.
சபைகளிலுள்ள வாலிபர் சங்கங்களை சந்தித்து கூட்டங்களை நடத்துதல் & ஜெப குழுக்களை உருவாக்குதல். செப்டம்பர் மாதம் முதல் ஞாயிறு வாலிபர் ஞாயிறாக ஆசரித்தல். வாலிபர் ஞாயிறு ஆராதனை முறைமை click here
திருமண்டல அளவில் மூன்று நாள் முகாம் சேகர அளவில் ஒருநாள் முகாம் மற்றும் சபை மன்ற அளவில் ஒரு நாள் வாலிபர் முகாம் நடத்துதல்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு , வேதாகம தேர்வு & கூண்டு விளக்கு போட்டி நடத்தி, கிறிஸ்துமஸ் ஹங்காமா என்ற நிகழ்வில் ஏழை எளிய வாலிபர்களுக்கு உதவிகள் செய்தல்.
இன்னிசை இரவு நிகழ்ச்சி வாலிபர் கொண்டாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்துதல்.
ஆண்டுதோறும் குடும்ப தின தியானம் என்ற தின தியான நூல் வெளியீடு.
மாதந்தோறும் வாலிபர் தோழன் என்ற பத்திரிக்கை வெளியீடு.
துணை நின்ற நூல்கள்
திருமண்டல பஞ்சாங்கம்
வாலிபர் தோழன்
0 Comments