Ad Code

வாலிபர் ஞாயிறு ஆராதனை முறைமை | Youth Sunday Service Method

செப்டம்பர் முதல் ஞாயிறு -

 இளைஞர் ஞாயிறு

ஜெபம் பண்ணக்கடவோம்...(முழங்காலில்)
முகவுரை வசனம் / பாடல்

இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள். (சங்கீதம் 148.12)

 கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும். (யோவான் 4.24)
 
ஆரம்ப ஜெபம்

ஆரம்ப பாடல்
(யாவரும் எழுந்து நின்று)

பிழை உணர அழைப்பு

வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் கடவுள் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி. (பிரசங்கி 11.9)

மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த கடவுளினிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை. (பிரசங்கி 12.7)

இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குக் கடவுள் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். (1 பேதுரு 5:5)

நாம் நம்மை வஞ்சித்து, அவர் திருமுன் நிற்கும் பேற்றினை இழந்து போகாதவாறு, நம்முடைய பிழைகளை கடவுளின் சந்நிதியில் முழங்கால்படியிட்டு தாழ்மையுடன் அறிக்கையிடுவோம். 
(முழங்காலில் சிறிதுநேரம் அமைதியாக...)

கன்.கீ 453 (ஏதாவது ஒரு கவியை பாடலாம்)

பாவ அறிக்கை

(யாவரும் சேர்ந்து சொல்லுவோம்)

மகா பரிசுத்தமும், கிருபையுமுள்ள எங்கள் அன்பின் தந்தையே, உம்முடைய வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் எங்கள் மனம் போன போக்கிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வார்த்தையிலும் நடக்கையிலும் அன்பிலும் ஆவியிலும் விசுவாசத்திலும் கற்பிலும் மற்றவர்களுக்கு மாதிரியாக இருக்க தவறியிருக்கிறோம். எங்கள் மீது தயைகூர்ந்து, எங்கள் இளவயதின் பாவங்களை நினையாமல், மறைவான குற்றங்களுக்கு எங்களை நீங்கலாக்கும். உம்முடைய வசனத்தின்படி எங்கள் வழியை சுத்தம் பண்ணி, எங்களைக் காத்துக் கொள்ளவும், இளைய குமாரனை போல நாங்கள் இனி தெளிந்த புத்தியும் இறைபக்தியும் உள்ளவர்களாய் நடந்து வர, எங்கள் நண்பரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவினிமித்தம் எங்களுக்கு கிருபை செய்தருளும், ஆமென்.

பாவ விமோசனம் (ஆயர் / சபை ஊழியர்)

எல்லாம் வல்ல கடவுள், தம்மிடத்தில் வருகிறவர்களை புறம்பே தள்ளுவதில்லை.  மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும். மனதுருக்கமுள்ள தகப்பனாகிய அவர், நம்முடைய அக்கிரமங்களுக்காக, தம்முடைய வாலிப பருவத்தில் மரித்து உயிர்த்த அவருடைய குமாரனாகிய இயேசு இரட்சகரின் அருளினாலே நம்முடைய பாவங்களை மன்னித்து, தம்முடைய தூய ஆவியினாலே நம்மை அவருடைய பிள்ளைகளாக உறுதிபடுத்தி, நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்துவாராக. ஆமென்.

கர்த்தருடைய ஜெபம்

       பரமண்டலங்களிகிருக்கிற எங்கள் பிதாவே... ஆமென்.
      அல்லது பாடல்: வானகம் வாழ்ந்திடும் எங்கள்.... பரமண்டல ஜெப பாடல் click here

துதி செலுத்துதல் (#சங்கீதம் 34)

ஆ. ந. ஆண்டவரை எல்லாக் காலங்களிலும் போற்றிடுவோம்.
சபை. அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்.

ஆ. ந. என்னோடு கூட ஆண்டவரை மாட்சிப் படுத்துங்கள்.
சபை. நாம் ஒருமித்து அவர் பெயரை உயர்த்துவோம்.
 
ஆ. ந. ஆண்டவர் நல்லவர் என்பதை சுவைத்து அறியுங்கள்.
சபை. அவர் மேல் நம்பிக்கையாய் இருக்கிற மனிதர் பேறுபெற்றோர்.

               (எல்லாரும் எழுந்து நிற்க)
ஆ. ந. பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக;

சபை. ஆதியிலும் இப்பொழுதும் எப்போதும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக, ஆமென்.

ஆ. ந. ஆண்டவரைப் போற்றுங்கள்
சபை. ஆண்டவருடைய திருப்பெயர் போற்றப் பெறுக.

மூன்று வாலிபர் கீதம் - கீ.கீ. 371
       கர்த்தர் சிருஷ்டித்த சகல....

முறைமை சங்கீதம்
            (பஞ்சாங்கம் / சங்கீதம் 115)
    பிதாவுக்கும் குமாரனுக்கும்.... ஆமென்.

(உட்காருவோம்) 
சிறப்பு நிகழ்வு

முதலாம் திருமறைப்பகுதி
          (பஞ்சாங்கம்)

சிறப்பு நிகழ்வு / பாடல்

இரண்டாம் திருமறைப்பகுதி
             (பஞ்சாங்கம்)

(எழுந்த நிற்போம்)
அப்போஸ்தல பற்றுறுதி

    வானத்தையும் பூமியையும் படைத்த.... ஆமென்.
    அல்லது பாடல்: வானும் புவியும் வையகமும்...

மன்றாட்டு வேளை
(முழங்காற்படியிடுவோம்)

மறுமொழி: நாங்கள் வேண்டிக்கொள்கிறதை கேட்டருளும் தயவுள்ள கர்த்தாவே.

1. ஆண்டவரையும், அவருடைய ஆலயத்தையும் விட்டு தூரம் போய்க்கொண்டிருக்கும் இளைய சமுதாயம் மெய்யான ஒளியைக் கண்டு பரம தந்தையின் உள்ளத்தை மகிழ்வாக்கிட வேண்டுமென்று...

2. சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளிள் அடிமையாகி, தங்கள் நேரத்தையும், ஆரோக்கியத்தையும் வீணடிக்கும் வாலிபர்கள் மனந்திரும்பி, இந்த நவீன உலகில் தங்கள் திறமைகளை ஆக்கபூர்வமான செயல்ப்பாடுகளில் பயன்படுத்த முன்வர வேண்டுமென்று...

3. எங்கள் வாலிபர்கள் அனைவரையும், தற்கொலை, விபத்து போன்ற அகால மரணங்களுக்கு விலக்கி, பிசாசின் மாயையிலும் சிக்கிக் கொள்ளாதப்படிக்கு காத்து பராமரிக்க வேண்டுமென்று.... 

4. படித்து முடித்துவிட்டு, வேலை வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் எங்கள் இளையோர் நல்ல உத்தியோகத்தைப் பெற்றிடவும், நல்ல எதிர்காலம் அமைந்திடவும் வேண்டுமென்று...

5. திருநெல்வேலி திருமண்டல வாலிபர் ஐக்கிய சங்கத்தின் ஊழியங்கள் யாவும் சீரிய முறையில் நடைபெறவும், அதில் பணியாற்றுகின்ற இறைப் பணியாளர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து பராமரிக்கவும் வேண்டுமென்று...

வாலிபர் ஞாயிறு சுருக்க ஜெபம்
                  (சுருக்க ஜெப புத்தகம்)

(உட்காருவோம்)
சபை அறிவிப்புகள் (ஆயர்/சபை ஊழியர்)

அருளுரை

காணிக்கை பாடல் (எழுந்து நின்று)
          கீ.கீ. 388  எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே...

நிறைவு ஜெபம் (முழங்காலில்)

ஆசீர்வாதம் (ஆயர்/சபை ஊழியர்)

என்றும் மாறாத தந்தையாகிய யெகோவா,
இளவயதின் நாயகராகிய இயேசுகிறிஸ்து, 
என்றைக்கும் உடனிருப்பவராகிய தூய ஆவியாராகிய திரித்துவக் கடவுளின், அன்பும் ஆசீரும் இன்பமும் உங்களனைவரோடுங்கூட எப்போதைக்கும் இருப்பதாக.   ஆமென்.

முடிவு கவி கன்.கீ. 152

எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானீ(வீ)ர்
உம் நாமமே தழைத்தோங்க 
நான் பாடுவேன் உமக்காக
      எந்தன் இதயமே உம்மைப் பாடும்
      எந்தன் நினைவுகள் உமதாகும்
இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்
எனக்கென்ன ஆனந்தம்.....         ஆமென்.

பின்னுரை
ஆ. ந. கர்த்தர் உங்களோடிருப்பாராக.
சபை. அவர் உமது ஆவியோடும் இருப்பாராக.

ஆ. ந. இறை சமாதானத்தோடு சென்று வாருங்கள்.
சபை. கர்த்தருடைய நாமத்தினாலே, ஆமென்.


துணை நின்ற நூல்கள்
ஜெப புஸ்தகம் - திருநெல்வேலி திருமண்டலம்
வழிபடுவோம் வாரீர் - அரசரடி.


Post a Comment

0 Comments