இறையேசுவில் இனிய உறவுகளே,
"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்" என்ற நம்பிக்கை தரும் இறைமகனின் உயிர்ப்பில் பங்குபெற அழைக்கப்பட்ட இறந்தோர் நினைவு நாளை சிறப்பிப்பதே சகல ஆத்துமாக்களின் திருநாள் ஆகும்.
அனைத்து ஆன்மாக்கள் திருநாள் (All Souls' Day) அல்லது மரித்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் (The Commemoration of All the Faithful Departed) என்பது, சில கிறிஸ்தவ சபைகள் மரித்தோரை நினைவுகூருகின்ற ஒரு சிறப்பு விழா ஆகும். கிழக்கு கிறிஸ்தவ சபைகளின் கத்தோலிக்க திருச்சபை, இந்நாளைச் சிறப்பாக நினைவு கூர்கின்றது. மேலும், ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் பழைய கத்தோலிக்க திருச்சபைகளும் இதனைக் கொண்டுள்ளன. கத்தோலிக்க திருச்சபையில் இதனைக் கல்லறைத் திருநாள் எனவும் அழைப்பர். ஆனால் சபைகளுக்கு இடையே நம்பிக்கை கோட்பாடுகள் மாறுகின்றன.
கத்தோலிக்க திருச்சபையில் இந்த நாள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி நினைவுகூரப்படுகின்றது. இது, அனைத்து புனிதர் பெருவிழாவுக்கு அடுத்த நாளாகும். நவம்பர் மாதம் இரண்டாம் தேதி ஞாயிறாக இருந்தால், ஆங்கிலிக்க ஒன்றியத்தில் (2008ம் ஆண்டு நிகழ்ந்தது போல) அடுத்த நாளான நவம்பர் 3 அன்று இந்த நாள் நினைவு கூரப்படும்.
வரலாறு என்ன?
தொடக்க திருச்சபையின் வாழ்வு மிகவும் போராட்டம் நிறைந்த வாழ்வாக அமைந்திருந்தது. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் உரோமையில் அவ்வப்போது ஏற்பட்ட வேதக்கலாபனையில் பலரும் இயேசுவுக்கு சாட்சியாக இறந்தனர். மிகக்குறிப்பாக திருச்சபையின் இரு தூண்கள் எனப்படும் புனித பேதுரு மற்றும் புனித பவுலின் கல்லறைகள் மக்களிடையே விரும்பிச் சந்திக்கப்பட்ட இடங்களாக மாறின. காலஞ்செல்லச் செல்ல மறைச் சாட்சிகளாக இறந்த இவர்களின் கல்லறைகளில் கி.பி 3ம் நூற்றாண்டுக்குப் பிறகு திருச்சபை ரோமில் வேரூன்ற ஆரம்பித்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சாட்சிய வாழ்வை நினைவு கூர்ந்து மக்கள் விழாக் கொண்டாடி அவர்களின் கல்லறைகளைச் சந்தித்து வந்தனர்.
வேத கலாபனைகளில் மறைசாட்சிகளாக மரித்தவர்களை ஒட்டுமொத்தமாக அடக்கம் செய்யும் பழக்கமும் இருந்தது. திருத்தூதர்களின் கல்லறைகள் போன்றே அவர்களின் கல்லறைத் தோட்டங்கள் காலப் போக்கில் மக்கள் விரும்பிச் சந்திக்கும் இடங்களாகவும் மாறின. இதற்கு சிறந்த உதாரணம் திருத்தொண்டராக இருந்து மறைசாட்சியாக மரித்த புனித லோரன்ஸ் என்பவரின் இடத்தில் இன்றும் அவரின் பெயரில் ஆலயம் உள்ளது. அதை ஒட்டிய மிகப் பெரிய கல்லறைத் தோட்டம் இன்றளவும் உள்ளது. மக்கள் ஒவ்வொரு ஆண்டும், சிறப்பான வகையில் இங்கு திருப்பலி நிறைவேற்றி மறைசாட்சிகளாக இறந்தவர்களை நினைவு கூறுகின்றனர். இருப்பினும் இக்கல்லறை விழா உலகத் திருச்சபை அளவில் கொண்டாடப்படும் விழாவாக இருக்கவில்லை.
கி. பி. 998ம் ஆண்டில், புனித ஓதிலோ என்பவர் தன்னுடைய குளுனி சபையினருக்கு இதனை அறிமுகப்படுத்தினார். இவர் குளுனி சபையின் முதல் மடாதிபதியாக இருந்தார். தன்னுடைய துறவற மடத்தில் வாழ்வோர் இறந்தவர்களுக்காக சிறப்பான செபங்களைச் செய்ய வேண்டும் என்பதற்காக இவ்விழாவை அறிமுகப்படுத்தினார்.
11ம் நூற்றாண்டில் மரித்தவர்களுக்காக மன்றாடும் குளுனி சபையினரின் வழக்கம் ஐரோப்பிய நாடுகளிம், இலத்தீன் அமெரிக்கா நாடுகளும், மிக விரைவாகப் பரவியது. இறந்த ஆன்மாக்களுக்காக மன்றாடும் இவ்விழாவைத் தாய் திருச்சபை கி.பி 13ம் நூற்றாண்டில் அனைத்துலகின் விழாவாக கொண்டாட அனுமதி வழங்கியது.
இறந்தவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தவர்கள் இம்மண்ணை விட்டு சென்றவர்கள் என்பது வலி நிறைந்த உண்மையே. இறந்தவர்கள் நிஜங்களாக அல்லாமல் நினைவுகளாக நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அதைவிட மிகவும் பொருந்தக் கூடிய உண்மையே.
சீர்த்திருத்த சபையின் நம்பிக்கை
அனைத்து ஆன்மாக்கள் திருநாளானது, இறந்த நம் முன்னோர்களை நினைவுகூர அழைப்பு கொடுக்கிறது.
நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை, கற்றுக்கொடுத்த காரியங்களை செயல்படுத்த நினைப்பூட்டுகிறது.
இத்திருநாளில் நம் ஆத்துமா எந்த நிலையில் இருக்கிறது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மூட நம்பிக்கைகள்
இறந்தவர்களுக்காக மன்றாடும் வழக்கம் ஆண்டவரின் வார்த்தைக்கு புறம்பானது.
தூய்மை பெறும் நிலை, அல்லது உத்தரிப்பு நிலை, அல்லது உத்தரிக்கிற ஸ்தலம் என்பது, கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கையின்படி, மரிக்கும் வேளையில் நம்பிக்கையுடன் கடவுளோடு நட்புறவில் மரித்தும் விண்ணகம் செல்ல முழு தகுதியற்றவர்களாக இருப்பவர்கள், சிறிது காத்திருந்து தூய்மைபெற்று முதிர்ச்சியடைய கடவுளால் அளிக்கப்படும் வாய்ப்பு ஆகும். இவர்கள் இந்த நிலையில் தங்கள் பாவங்களுக்கு உரிய வேதனைப்பட்டு, தூய்மை அடைவார்கள் எனவும் முற்றிலும் தூய்மை அடைந்த பிறகு, விண்ணகம் செல்வார்கள் எனவும் கத்தோலிக்கர் நம்புகின்றனர். இத்தகையோருக்கு கத்தோலிக்க திருச்சபையினர் இவ்வுலகில் இருந்து தங்களின் மன்றாட்டினால் உதவிட முடியும் என நம்புகின்றனர். இந்த நம்பிக்கை பரிசுத்த வேதத்திற்கு புறம்பானது
தூய்மை பெறும் நிலை பற்றிய நம்பிக்கையை சீர்திருத்த சபைகள் எதிர்க்கின்றன. அதாவது
இறந்தோரை நினைவுகூர்ந்து, அவர்கள் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்காக அவர்களுக்காக இறைவேண்டல் செலுத்தும் வழக்கம் "தூய்மை பெறும் நிலை" (Purgatory) என்ற கோட்பாடாகும். இது வேதத்திற்கு புறம்பானது.
0 Comments