🌹நவம்பர் 14 ஆம் தேதி தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட தினம் குழந்தைகள் தினம். குழந்தைகள் நம் நாட்டின் பலம், சமூகத்தின் எதிர்காலம்.
🌹 குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20ஆம் நாள் பன்னாட்டு குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் நவம்பர் 14ஆம் நாள் இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.
🌹 சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1889ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பிறந்தார்.
🌹 இவர் குழந்தைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால், இவரது பிறந்த நாள் இந்திய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
🌹 இவர் சிறந்த ஆங்கில எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் எழுதிய ஆங்கில நூல்கள் 'தி டிஸ்கவரி ஆப் இந்தியா" மற்றும் 'க்ளிம்ப்ஸ் ஆப் வேர்ல்ட் ஹிஸ்டரி" ஆகியவை ஆகும். இவர் எழுதிய தமிழ் நூல்கள் உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு போன்றவை ஆகும்.
🌹 நேரு அவர்கள், ஆகஸ்ட் 15, 1947ஆம் ஆண்டு முதல் மே 27, 1964ஆம் ஆண்டு வரை பிரதமராக பணியாற்றினார்.
🌹 'இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது" என்பதை நன்கு உணர்ந்த நேரு அவர்கள், அரசாங்க உயர்கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கவனித்து வந்தார். நேரு அவர்கள், 1964ஆம் ஆண்டு, மே 27ஆம் தேதி மறைந்தார்.
🌹இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களும் அதிகரித்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்துக் குழந்தைகளும் அடிப்படைக் கல்வி பெற்று முழுப் பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கம்.
0 Comments