ஆண்டவரின் அருளால் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி திருநெல்வேலி திருமண்டலத்திற்கான 16வது பேராயர் தேர்தல் பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தில் வைத்து நடைபெற்றது. அதில் போட்டியிட்ட 11 ஆயர்களில் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அம்மூவரில் ஒருவர் தென்னிந்திய திருச்சபை சினாட் குழுவின் முடிவின்பேரில் பேராயராக நியமிக்கப்படுவது திருச்சபையின் மரபு. நெல்லையில் 19.11.2021 அன்று நடைபெற்ற கமிட்டியில் அருட்திரு. ARGST. பர்னபாஸ் ஆயரவர்கள் திருநெல்வேலி மறைமாவட்டத்தின் புதிய பேராயர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
பேராயர் திருநிலைப்படுத்துதல் வழிபாடு (Holy Consecration Service of Bishop) பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தில் வைத்து 21.11.2021 (ஞாயிறு) அன்று மதியம் 2.00 மணிக்கு நடைபெறும்.தொடர்ந்து ஜெபிப்போம்... பங்குபெறுவோம்... இணைந்து பணியாற்றுவோம்... கடவுளின் திருப்பெயர் மாட்சி பெறட்டும்...
1 Comments
God's Choosing always Perfect
ReplyDelete