Ad Code

இந்திய இராணுவ தினம் | Indian Army Day | January 15


🔫 தாயகம் காக்க தன்னலம் நீங்கி உறவுகளின் பிரிவுகளை ஏற்று வெயில், பனி பாராது ரத்தம் சிந்தி இன்னுயிரையும் தாய் மண்ணிற்காக இழக்கத் துணிந்து இந்தியத் திருநாட்டினைப் பாதுகாக்க இந்தச் சணமும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்திய ராணுவத்தின் மகத்தான வீர தீரங்களின் தினமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி இந்திய ராணுவ தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

🔫 உலகின் மூன்றாவது மிகப்பெரிய ராணுவ சக்தியாகத் திகழும் இந்திய ராணுவம் 1.3 மில்லியன் வீரர்களுடன் நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்துவருகின்றது.இந்த நாளில் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. 

🔫 இந்த நாளை ராணுவ தினமாகத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம், இந்தியாவின் முதல் இந்திய ராணுவ தளபதியாக ஜெனரல் கே.எம்.கரியப்பா (K.M.Cariappa) 1949ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதிதான் பதவி ஏற்றார். அதற்கு முன்பு வரை பிரிட்டிஷ்காரர்களே தளபதிகளாக இருந்து வந்தார்கள். இவர் ராணுவ வாழ்க்கையில் தனது இறுதி மூச்சு வரை நாட்டிற்காக தன்னலமற்ற சேவை புரிந்தார்.

🔫 சகமனிதனுக்குக் கிடைக்கப்பெறும் சாதாரண அடிப்படை சந்தோஷங்களைக் கூட தனக்குள்ளே அழுத்திவைத்துக்கொண்டு சுற்றம், சூழல் எதையும் பொருட்படுத்தாது, தன்னை மெலுகாக்கி, தேசப்பற்றைத் திரியாக்கி, தியாகச் சுடராக ஒளிவீசிக் கொண்டிருக்கும் நம் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றாக நிமிர்ந்து நின்று பெருமிதமாகவே அடிக்கலாம், ஒரு சல்யூட்…!

Post a Comment

0 Comments