Ad Code

Tabernacle of Israelites | இஸ்ரவேலரின் தொழுகைக் கூடாரம் #3Parts



மோசே மூலம் அமைத்துக் கொடுத்த தொழுகைக் கூடாரம் இஸ்ரவேலரின் வாழ்வில் மிகமுக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. ஆசரிப்பு கூடாரம் பாளயத்தின் மத்தியில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அதை சுற்றிலும் இஸ்ரவேலரின் 12 கோத்திரத்தார் பாளயமிரங்கியிருந்தனர். அவர்கள் 3 கோத்திரங்கள் வீதம் 4 திசையிலும் பாளயமிரங்கியிருந்தனர்.

ஆசரிப்பு கூடாரம் பரிபூரண செவ்வக வடிவில் 100 முழ நீளம் 50 முழ அகலமாய் இருந்தது. 175 அடி நீளம் 87 1/2 அடி அகலம், 8’ 9" உயரமாய் இருந்தது. இந்த அளவு எப்பொழுதும் ஒரே அளவாகவே இருந்தது. ஆசரிப்பு கூடாரத்துக்கு ஒரே வாசல் இருந்தது. தேவனிடம் செல்வதற்கு ஒரே வாசல் மட்டுமே உண்டு.
இது மூன்று பிரிவுகளாக இருந்தது.

1. பொது வெளி (Common Place)
இங்கு போதிய அளவு சூரிய ஒளி இருந்தது.

2. திருத்தலம் (Holy place)
இங்கு குத்து விளக்குகள் ஒளி வீசின.

3. தூயதிருத்தலம் (Holy of Holies)
இங்கு ஒளி இல்லை. இருட்டாகத்தான் இருந்தது. நமது கோவில்களின் கருவரைகள் போல் இருக்கும். திரைச்சீலையை விலக்கிக் கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை தலைமைக் குரு மட்டும் உள்ளே சென்று , அங்கிருந்த பீடத்தில் பலியின் இரத்தத்தைப் பூசி, இஸ்ரயேலருக்காகக் கடவுளிடம் மன்னிப்பு வேண்டுவார்.

உடன்படிக்கைப் பெட்டி
ஆசரிப்புக்கூடாரத்தில் உள்ள மகா பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள உடன்படிக்கை பெட்டியினுள் 
1. மன்னா வைக்கபட்ட பொற்பாத்திரமும்
2. ஆரோனுடைய தளிர்த்த கோல்
3. உடன்படிக்கையின் கற்பலகை
போன்றவை இருந்தன.

திரைச்சீலை:
திருத்தலத்தையும் தூயதிருத்தலத்தையும் பிரித்த திரைச்சீலை நம் வீடுகளில் உள்ளது போன்ற நைலான் திரைச்சீலை அல்ல. 4 அங்குலம் தடிமனில் திரிக்கப்பட்ட கயிறுகளால் இணைத்து உருவாக்கப்பட்ட (4 அங்குலக் காங்கிரீட் சுவர் போன்றது) இலகுவில் கிழிக்க முடியாது. கிழிந்த சேலைகள்,கைலிகளை நீளவாக்கில் கிழித்து, கயிறுகளாக்கிப் பின்னர் அதை இணைத்துச் செய்கிறார்கள். ஆனால் இயேசுவின் மரணத்தின்போது அந்தத் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்ததல்லவா?

Post a Comment

0 Comments