ஆம், Xmas என்று சொல்வது முற்றிலும் சரி; இது Christmas என்ற வார்த்தையின் சுருக்கம். இதில் 'X' என்பது கிரேக்க மொழியில் கிறிஸ்து (Christos) என்பதன் முதல் எழுத்து (Χ). கிரேக்கத்தில் சுருக்கமாக X என்றால் Christ என்று குறிக்கும்.
Christian - X ' tian
Christology - X ' tology
என்று எழுதலாம்.
உச்சரிக்கும் போது ஆங்கில வழக்கில் x என்று சொல்லாமல், Chirst என்று உச்சரிக்க வேண்டும்.
சிலர் 'X' என்பது 'Christ' என்ற வார்த்தையை நீக்குகிறது என்று தவறாக நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில், 'X' என்பது கிறிஸ்துவைக் குறிக்கும் ஒரு பழமையான சின்னம், மேலும் இந்தச் சொல் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது.
மேலும் தமிழில் எழுதும் போது கிறிஸ்மஸ் என்று எழுதாமல், கிறிஸ்துமஸ் என்று எழுவது சிறப்புடையது.

0 Comments