Ad Code

கழுகு | A Life of Eagle | கழுகின் பார்வை, உருமாற்றம் | Eagle's Nature and Power

கழுகின் அமைப்பு

கழுகுகள் அக்ஸிபிட்ரிடே குடும்பத்தை சேர்ந்த பறவை இனம். சுமார் 60 வகையான இனங்கள் உள்ளன. உயரமான பாறைகள் நிறைந்த மலைப்பகுதிகளில் வாழும் கழுகுகள் கொடூரமான வேட்டைக்காரர்கள். மிகச்சிறிய உயிரினங்களில் ஒன்றான சிறிய கழுகு சுமார் 45–55 செ.மீ ஆகும். இதற்கு நேர்மாறாக, ஸ்டெல்லர்ஸ் கடல் கழுகு சுமார் 91–106 செ.மீ அளவு கொண்டது. மேலும் இறக்கைகள் சுமார் 2–2.5 மீ வரை அடையலாம்.

கழுகின் பறக்கும் திறன்

கழுகுகள் பெரும்பாலும் 7 முதல் 11 வாரங்களில் பறக்கத் துவங்கும். தன் தாயைப் பார்த்து சிறகைவிரித்து பறப்பது போல் நடித்து, ஒரு பாறையில் இருந்து மறு பாறைக்கு தாவி குதித்து தன் பிறப்பின் அடிப்படை உரிமையான பறத்தலை படித்துப் பார்க்கும். பறத்தலுக்கான காலம் வந்ததும் துணிந்து தப்பும் தவறுமாக சிறகை அடித்து அடித்து சரியாக தெரியாமல் மலை உச்சியில் இருந்து விழும் கழுகு ஒரு கட்டத்தில் சரியாக சிறகை அடிக்க கற்றுக் கொள்ளும். கழுகின் முதல் பறத்தலை fledging என்பார்கள். கழுகுகள் கீழ்நோக்கி செல்வதே இல்லை. சிறகை படபடத்து படபடத்து உயர துவங்கும் கழுகு இரண்டு பக்கமும் சிறகை பிடித்தபடி வட்டமடித்து வட்டமடித்து வட்டமடித்து வான் ஏறும். இப்படி வட்டமடித்துக் கொண்டு தான் ஆளப்போகும் மொத்த உலகையும் பார்க்கும். 

கழுகு பார்வை

கழுகின் கண் பார்வை கூர்மையானது. கண்கள் பெரியவை. மேலும் மனிதக் கண்ணைப் போலவே எடையும் இருக்கும். கழுகுகளின் பார்வை மனிதனை விட 4–5 மடங்கு சிறந்தது. கழுகு கண்கள் முகத்தின் மையத்திலிருந்து 30 டிகிரி தொலைவில் காணப்படுகிறது. இது கழுகுகளுக்கு அதிக பார்வை அளிக்கிறது. புற ஊதா ஒளியைக் கண்டறிய முடியும். மனிதர்களை விட கழுகுகளுக்கு சிறந்த பார்வை இருப்பதற்கான ஒரு காரணம், அவற்றின் விழித்திரை, கண் பார்வையின் பின்புறத்தில் ஒரு அடுக்கு, அதிக கூம்புகளைக் கொண்டுள்ளது.

கழுகின் உருமாற்றம்

கழுகுக்கு ஆயுட்காலம் பொதுவாக 70 ஆண்டுகள் வரை என்பார்கள். தங்கள் வாழ்நாளின் இடையில், கழுகின் முக்கியமான ஆயுதங்களான சிறகு, அலகு மற்றும் கால் நகங்கள் பழுதடைந்து இருக்கும். சிறகுகள் கிழிந்து சரியாக பறக்க இயலாத வண்ணம் கேடு அடைந்திருக்கும். அலகு தேய்மானம் அடைந்து கூர்மையை எழுந்திருக்கும். நகங்கள் மழுங்கிப் போய் இருக்கும். 

இந்த நிலையில் மீண்டும் தன் வல்லமையோடு வாழ, அந்தக் கழுகு ஒரு தவத்தை செய்ய, கழுகு யாருமே அண்ட முடியாத ஒரு உயரமான மலையின் பொந்தில் சென்று அமரும். தன் மழுங்கிப் போன அலகால் தன் இறகுகள் ஒவ்வொன்றாக கொத்தி பிடுங்கி எறியும். தன் அழகால் தன் மழுங்கிப் போன நகங்களை கொத்திப் பிடுங்கி எறியும். அதன்பின் தன் மூக்கு முழுவதாக உடையும் வரை பாறையில் கொத்தும். இவ்வாறாக, மீண்டும் தன் தாய் மடியில் கிடந்தது போல் சுருண்டு அந்த கூட்டில் கிடைக்கும். 
தண்ணீர் இல்லாமல் உணவில்லாமல் 150 நாட்தவத்தை மேற்கொண்ட பிறகு, புதிய சிறகுகள் முளைக்கும், புதிய நகங்கள் முளைக்கும், புதியதோர் அலகு முளைக்கும். இப்பொழுது அது ஒரு புதிய கழுகு தன் புதிய உறுப்புகளோடும், 35 ஆண்டு வேட்டை அனுபவத்தோடும் இறங்கும் அந்த வேட்டை களம் என்பது மிகக் கொடூரமானது. 

கழுகுகள் தினம்

சர்வதேச கழுகுகள் தினம் (International Eagle's Day) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

Post a Comment

0 Comments