ஆண்டவர் இயேசுவை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா
இயேசுகிறிஸ்து பிறந்து நாற்பது நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற கிறிஸ்து அர்ப்பணிக்கப்பட்ட காட்சியை (The Presentation of Christ), திருச்சபையானது பிப்ரவரி 2 ஆம் தேதி கொண்டாடுகிறது. இயேசு புறஜாதிகளுக்கு பிரகாசிக்கிற ஒளி என்பதை உணர்த்தும் வகையில் மெழுகுவர்த்திகளை (Candlemas) ஏந்தி நிற்பதை அல்லது வலம் வருவதை வழிபாட்டில் சேர்க்கப்பட்டுள்ளதால் மெழுகுவர்த்தி தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
பிறந்த இயேசுவை பெற்றோர் எருசலேம் கோவிலில் காணிக்கையாக்கினது, இயேசு கிறிஸ்துவின் வாழ்வின் ஆரம்பகால அத்தியாயமாகும். இது புதிய ஏற்பாட்டில் லூக்கா நற்செய்தியின் 2வது அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ( லூக்கா 2: 22-40)
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
“இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.
ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார்.
ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.
0 Comments