Ad Code

2. ஆவியில் எளிமையுள்ளோர் பேறுபெற்றோர் | செ. சுஜித் | Blessed are the Poor in Spirit | மத்தேயு 5.3 Matthew


ஆவியில் எளிமையுள்ளோர் பேறுபெற்றோர்

 


    செ. சுஜித் B.Com, M.S.W.,                                                                        நல்லூர் சேகரம்

          CSI திருநெல்வேலி திருமண்டலம்

BD - 4, பெத்தேல் வேதாகம கல்லூரி, குண்டூர்.   

 

 click here to download pdf of Meditation - 02


தியான வசனம்: மத்தேயு 5: 3 

வியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்பரலோகராஜ்யம் அவர்களுடையது.

 

முகவுரை

பாக்கிய வசனங்கள் (The Beatitudes) என்றழைக்கப்படும், ஆண்டவரின் மலை போதகத்தின் இந்த பகுதியில் முதலாவது ஆண்டவரால் பேறுபெற்றோர் என்றழைக்கப்படுபவர்கள், ஆவியில் எளிமையுள்ளவர்கள்.

 

விளக்கவுரை

 

ஆவியில் எளிமையுள்ளவர்கள் (Poor in the spirit) என்ற வார்த்தையில் இருந்து நாம், இது மாம்சத்திற்கான (Physical & Ecnomically) ஏழ்மையை குறிக்கவில்லை என அறிந்து கொள்ளலாம். ஆவியில் எளிமையுள்ளவர்கள் தங்களுடைய சுய நீதியையும், சுய பலத்தையும் பெருமையாக எண்ணாமல், கடவுளுடைய நீதியையும் அவருடைய கிருபையையும் மேன்மைப்படுத்துவார்கள். உயரத்தில் இருக்கும் மேகம் மழையாக பொழியும் போது அது எவ்வளவாகினும் தாழ்மையான பள்ளத்தை நோக்கியே ஓடிவர வேண்டும். அது போல நாம் பாக்கியவான்களாகிட, எளிமையை நோக்கிதான் ஓடிவர வேண்டும். கடவுள் மனத்தால் எளிமையுள்ளவர்களை ஆதரிக்கிறார். பெருமையுடையவருக்கு எதிர்த்து நிற்கிறார் (1பேதுரு 5:5) என்று திருமறையில் வாசிக்கின்றோம். பெருமைக்கு எதிரான எளிமை, தாழ்மை என்னும் இரட்டு உடுத்தி கொண்டோமென்றால் கடவுள் நம்மை உயர்த்துகிறவராக இருக்கிறார்.

 

பாக்கியவான்கள் (Blessed) என்ற சொல்லுக்கு, கிரேக்க மொழியில் வரும் μακάριος (மக்கரியாஸ்) ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை விட அதிகமான அர்த்தம் தரக்கூடியது பதமாகும். நீடித்த ஆனந்தம் மற்றும் பேறுபெற்றோர் என்று பொருள் கொள்ளலாம். முந்தய காலகட்டத்தில் கிரேக்க தேவர்களின் அதிகாரம் மற்றும் மகிழ்ச்சியை பிரதிபளிக்க இந்த வார்த்தை உபயோகப்படுத்தபட்டது. எனவே இது தகுதி பார்த்து கொடுக்கும் ஒரு ஆசீர்வாதம் என்று கருதப்படாமல், மக்களின் இயல்பான சுபாவங்களை (எளிமையான சுபாவங்களை) ஆண்டவர் ஏற்றுகொள்கிறார் என்று கருதப்படலாம்.

 

 

நித்திய வாழ்வு எளிமையுள்ளவர்களுக்கு உரியது

ஆவியில் எளிமையுள்ளவர்களுக்கு ஆண்டவர் பரலோக ராஜ்யத்தை (Kingdom of Heaven) கொடுப்பதாக வேதம் கற்றுத்தருகிறது. கடவுள் எளிய மனதுடைய மக்களுக்கு என்றும் நித்திய வாழ்வான இறையரசைத் தருகிறவராக இருக்கிறார் ஆண்டவர் இறையரசு மனமேட்டிமையுள்ளவர்களுக்கு அல்ல; மாறாக மனத்தாழ்மையுடையவர்களுக்குரியது என்பதை உறுதிப்படுத்துகிறார். எளிமைக்குச் சான்றாக வாழ்ந்த வில்லியம் கேரியின் கல்லறையில் பதிக்கப்பட்ட கற்பலகையில், “நான் ஒரு பரம ஏழை, உதவியற்ற புழு... உமது கரங்களில் நான் விழுகிறேன் என்று எழுதப்பட்டிருக்கிறது.

 

சிந்தனைக்கு,

 

அப்போஸ்தலர் பவுல் ஆவிக்குரிய காரியங்களில் ஐசுவரியவானாக இருந்தார். ஆவியானவருடைய அனைத்து வரங்களையும் கற்றுக்கொண்டவராக, வல்லமையாக ஊழியம் செய்தார். ஆயினும் அவர் தன்னுடைய ஆவியில் எளிமையுள்ளவராகவே இருந்தார். எல்லா அப்போஸ்தலர்களிலும் சிறியவன் கடைசியானவன் என்று கருதுகிறார். எல்லோரையும் இரட்சிப்பதற்காக அவர் எல்லோருக்கும் எல்லாமானார். இயேசு கிறிஸ்துவை பரிசுத்தமுள்ளவராகவும் தன்னை பாவிகளில் பிரதான பாவியாகவும் அறிக்கையிட்டார். இயேசு கிறிஸ்துவே எல்லாவற்றிற்கும் எல்லாமுமானவர் என்றுகூறி அவரில்லாமல், தான் ஒன்றுமில்லையென்று இயேசுவைப் போல் ஆவியில் எளிமையாக வாழ்ந்தார். “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது” என்று சொன்ன, நம் கடவுளாகிய கிறிஸ்தேசு அவர் கற்பித்தபடியே ஆவியில் எளிமையாக, தாழ்மையாக வாழ்ந்துகாட்டினார். நாமும், அவரது பாதச்சுவடுகளைப் பின்தொடர்வோம். ஆண்டவர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

 


 


Post a Comment

0 Comments