அறச் செயல்கள்
தா. ரெபின் ஆஸ்டின் B.A, சிவசைலயனூர், புலவனூர் சேகரம், CSI திருநெல்வேலி திருமண்டலம்.
BD - 3, ஐக்கிய வேதாகம கல்லூரி, புனே.
click here to download pdf of Meditation 23
தியான பகுதி: மத்தேயு 6:1 - 4
1மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. 2ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 3தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. 4அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
முகவுரை
இயேசு கிறிஸ்து மத்தேயு 6 ஆம் அதிகாரதின் முதல் 18 வசனகளில் தானதர்மம், ஜெபம், மற்றும் உபவாசம் என மூன்று காரியங்களை குறித்துக் கற்றுக்கொடுக்கிறார். இந்த மூன்று காரியங்களும் யூதர்களுடைய பக்திக்கடுத்த காரியங்களில் மிகமுக்கியமான இடத்தில் உள்ளன. குறிப்பாக, குறிப்பாக யூதர்கள் தங்களுடைய பக்தியில் முக்கியமாக கருதுகிற தர்மம், ஜெபம், உபவாசம் எனும் மூன்றை இவ்விதமாக கடைபிடிக்க வேண்டும் என்பதை விளங்குவதற்காக தான், எடுத்துக்காட்டாக வைத்து மக்களுக்கும், சீஷர்களுக்கும் விளக்குகிறார்.
தியானம்
மத்தேயு 6:1-ஆம் வசனத்தில் இயேசு சொல்வது, உங்களுடைய அறச் செயல்களை மக்கள் பார்க்க வேண்டுமென்று செய்யாதீர்கள். இரகசியம் (We have to maintain secret / Entire pencope) என்பது தான் இதனுடைய மையப் பொருள். கிரேக்கத்தில் Dikaiosune (to do righteousness or justice) என்பது பரந்த நோக்குடைய அறச்செயல்களை குறிக்கிறது. இயேசு கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்கிற எல்லா அறச்செயல்களும் (நீதி) மறைமுகமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். யூதர்கள் அறச்செயல்கள் (நீதி) செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய யூத மதக்கோட்பாடுகளில் மிக முக்கியமான ஒன்று (One of the Pillars of Judaism) (ஆதி18 :19 , 1 உபா 15:7-11, சங் 106:3; 112:9 ஏசா 56) புதிய ஏற்பாட்டு புத்தகத்தின் காலத்திலும் தான தர்மம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. (அப்போ9:36; 10:2; 24:17 1யோவான் 2.29; 3:7,10 வெளி22:11).
மத்தேயு 6:2 ஆம் வசனத்தில் இயேசு தர்மம் செய்தல் எனும் அறச்செயலைக் குறித்துப் பேசுகிறார். குறிப்பாக, இங்கே (You) நீங்கள் (நீ) என்பது மூல மொழியில் ஒருமையை குறிக்கிறது. அதாவது ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் சுட்டிக்காட்டி சொல்லுகிறார். இயேசு இங்கே தான தர்மம் மறைமுகமாக செய்யப்பட வேண்டும் என்பதற்காக தம்பட்டம் (Trumpet) எனும் வார்த்தையை உயர்வு நவிற்சி அணியாக (Hyperbole) அவர் பயன்படுத்தியுள்ளார்.
அது மட்டுமல்ல அவர் பயன்படுத்திய மாயக்காரர் அல்லது வெளிவேடக்காரர் (Hypocrite) என்னும் வார்த்தைகள் நாடகத்தில் நடிக்கும் நடிகர்களை, வேஷக்காரர்களை கிரேக்க மொழியில் குறிக்கிறது. மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக தான தர்மம் செய்பவர்கள் நாடக நடிகர்கள் (Actors) போல வேஷமிட்டு செய்வதாக இயேசு சுட்டிக்காட்டுகிறார்.
யூதர்கள் தான தர்மம் செய்தால் தங்களுக்கு நிச்சயம் கடவுளிடமிருந்து பலன் (Reward) கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசு சொன்னது: “அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு(Reward) பெற்றுவிட்டார்கள்”. இங்கே வெளிப்படையாக தான தர்மம் செய்பவர்கள் கைம்மாறை (Reward) பெற்றுவிட்டார்கள் என்று “நிகழ் காலத்தை” (Present Tense) குறிக்கும் சொல்லானது வருகிறது. அப்படியென்றால் வெளிப்படையாக மனிதர் காண வேண்டுமென்று நாம் தர்மம் செய்தால் எதிர்காலத்தில் கடவுளிடமிருந்து நன்மை நமக்கு கிடைக்காது. ஆனால், அந்த நேரத்தில் நாம் வெளிப்படையாக செய்யும் நன்மையை குறித்து சிலர் புகழுவார்கள் அது தான் நாம் செய்த தான தர்மத்திற்கு கிடைத்த கைம்மாறு. இதனால் இறை நாமமும் மகிமையடையாது; நமக்கும் பிரயோஜனமில்லை.
மத்தேயு 6:3 இல் மத்தேயு மறைமுகமாக தான தர்மம் செய்ய வேண்டும் என்பதை சுட்டிக் காண்பிப்பதற்காக உருவகமாக (Metaphorical) இதை பயன்படுத்துகிறார். மற்றவர்கள் பார்க்கும்படியாக நாம் தர்மம் செய்யக் கூடாது அது மறைமுகமாக இருக்க வேண்டும் இயேசு தம் போதனையில் வலியுறுத்துகிறார். மத்தேயு 6:4 இல் (Eternal) எதிர்காலத்தில் கடவுள் தரப் போகிற (Reward )கைம்மாறு மற்றும் நாம் தருமம் செய்வதால் கடவுளிடத்திலிருந்து கிடைக்கும் கைம்மாறுகளை குறித்துப் பேசுகிறார். பரிசுத்த வேதத்தின் புரிதலின்படி கடவுளுக்கு மறைவானது ஒன்றுமே இல்லை (1சாமு 16:76). நாம் மறைமுகமாக (Secret) கொடுக்கும் தான தர்மத்தை கடவுள் பார்த்து நமக்கு கைம்மாறு செய்கிறார்.
தான தர்மம் செய்வதில் இயேசு சொல்லும் மையக்கருத்து “மறைமுகம்”(Secret). அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் ரோமர் 2:28-29 இல் கூறுகிறார் (Secret Jesus) ஆவிக்குரிய, உள்ளான யூதர்களை குறித்துப் பேசுகிறார். மாம்சீக யூதர்களைப் போல நீதிநெறிகளை வெளிப்படையாக (மாம்ச ரீதியாக) செய்யக்கூடாது என்பதற்காக ஆவிக்குரிய, உள்ளான ரீதியாக செய்யுங்கள் என்று ரோம -திருச்சபைக்கும் அதைக் கற்றுக் கொடுக்கிறார்.
சிந்தனைக்கு…
இன்றையக் காலத்தில் அநேகம் பேர் தான தர்மம் செய்கிறார்கள், அதே நேரத்தில் தங்களுடைய பெயர் பிரஸ்தாபப்பட வேண்டும் என்பதற்காகவோ, புண்ணியம் தேடுவதற்காகவோ, தான தர்மம் செய்கிறார்கள். இன்னும் இன்றைய நவீன உலகத்தில் மொபைல் போன், கேமரா, மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி தான தர்மம் செய்வதை பிரபலப்படுத்துகிறார்கள். இவர்களுக்கு எந்த ஒரு பலனும் பரத்திலிருந்து வருவதில்லை, அவர்களுடைய பலனை அவர்கள் அடைந்துவிட்டார்கள். ஆனால் கிறிஸ்துவின் உபதேசத்தைக் கற்று பின்பற்றுகிற இந்த காரியத்திலும் இயேசுவைப் போல் வீண்புகழ்ச்சியை விரும்பாமல் அன்புள்ளத்தோடு தொண்டு செய்வோமாக.
|
0 Comments