Ad Code

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை | Galvaari Sinegam Karaiththidum Ennai | Lent Songs

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும்

1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும்
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்
கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்

2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்
என்னை காணுவோர் உம்மை காணட்டும்

3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா
நான் சிறுகவும் நீர் பெருகவும்
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்

Post a Comment

0 Comments