🌹🌹🌹மேயேகோ_இன் சர்வதேச பெண்கள் தின நல்வாழ்த்துகள்...
🌹ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
🌹ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (USESCO யுனெஸ்கோ) கூற்றுப்படி, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் தொழிலாளர் இயக்கங்களின் செயல்பாடுகளில் இருந்துதான், சர்வதேச மகளிர் தினம் தோன்றியது.
🌹1908 ஆம் ஆண்டு நியூயார்க்கில் பெண்களின் கடுமையான வேலைகளுக்கு எதிராக ஆடைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்றது. அதை கௌரவிக்கும் வகையில் அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி வாயிலாக, முதன் முதலில், தேசிய மகளிர் தினம் பிப்ரவரி 28, 1909 அன்று அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது.
🌹1917 இல், ரஷ்யாவில் பெண்கள் பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பை வேலைநிறுத்ததின் மூலம் காட்டினர். இது கிரிகோரியன் நாட்காட்டியில் மார்ச் ஆகும். அவர்களின் இயக்கம் இறுதியில் ரஷ்யாவில் பெண்களுக்கான வாக்குரிமையை இயற்ற வழிவகுத்தது.
🌹1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனமே பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான சமத்துவக் கொள்கையை உறுதிப்படுத்தும் முதல் சர்வதேச ஒப்பந்தமாகும்.
🌹ஆனால் 1975 ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று தான், ஐநா தனது முதல் அதிகாரப்பூர்வ சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது.
🌹டிசம்பர் 1977 இல், பொதுச் சபை பெண்களின் உரிமைகள் மற்றும் சர்வதேச அமைதிக்கான ஐக்கிய நாடுகளின் தினத்தை உறுப்பு நாடுகளால் ஆண்டுதோறும் எந்த நாளிலும் அவர்களின் வரலாற்று மற்றும் தேசிய மரபுகளுக்கு ஏற்ப கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரகடனப்படுத்தியது.
🌹இறுதியாக, 1977 இல் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச மகளிர் தினம் ஒரு முக்கிய உலகளாவிய தினமாக மாறியது.
0 Comments